2011-ம் ஆண்டிலிருந்து திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையாக இருந்து வந்தது மேற்கு வங்கம். ஆனால், அந்தக் கோட்டையை தற்போது பாஜக கைப்பற்றியுள்ளது.
மேற்கு வங்கத்தின் முதலமைச்சரான மம்தா பானர்ஜிக்கே தோல்வியைத் தீர்ப்பாக வழங்கியுள்ளனர் மக்கள். இவர் பவானிபூரில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரிக்கு எதிராக களம் கண்டார். ஆனால், 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியைத் தவறவிட்டுள்ளார்.
சுவேந்து அதிகாரியிடம் மம்தா தோல்வியை தவறவிடுவது இது முதல்முறை அல்ல. 2021-ம் ஆண்டு நந்திகிராமில் சுவேந்து அதிகாரியை எதிர்த்துப் போட்டியிட்டார் மம்தா. ஆனால், அப்போது வெறும் 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து வெற்றியைத் தட்டிச் சென்றார்.
2021-2026 காலகட்டத்தில் அமைச்சராக இருந்து, இப்போது இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற அமைச்சர்களின் பட்டியல்…
அருப் ராய் – உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர்
ரதின் கோஷ் – உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர்
பிப்லாப் மித்ரா – நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர்
ஜாவேத் அகமது கான் – பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்
பிரஹாத் ஹக்கீம் – நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர்
ஸ்நேஹாசிஸ் சக்ரவர்த்தி – போக்குவரத்து துறை அமைச்சர்
தோல்வியுற்ற அமைச்சர்களின் பட்டியல்…
ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதுபோல, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தோல்வியைத் தவறவிட்டுள்ளார்.
அடுத்து ,தோல்வியைத் தழுவிய அமைச்சர்களின் பெயர்கள், ‘அமைச்சரின் பெயர் – அமைச்சகம் – போட்டியிட்ட தொகுதி – எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்’ என்கிற வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது.
அரூப் பிஸ்வாஸ் – மின்சாரம் மற்றும் விளையாட்டு – டோலிகஞ்ச் – 6,013
பிரத்யா பாசு – உயர்கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் – டம் டம் – 25,273

சுஜித் போஸ் – தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் – பிதான்நகர் – 37,330
டாக்டர் சசி பாஞ்சா – பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் – ஷியாம்புக்கூர் – 14,633
மனஸ் புனியா – நீர்வளம் – சபங் – 11,136
சோபந்தேப் சட்டோபாத்யாய – விவசாயம் – கர்தாஹா – 24,486
ஸ்நேஹாசிஸ் சக்ரவர்த்தி – போக்குவரத்து – ஜங்கிபாரா – 862
சித்திகுல்லா சவுத்ரி – மக்கள் கல்வி – மாண்டேஸ்வர் – 14,798
மலோய் கட்டக் – சட்டம் மற்றும் தொழிலாளர் நலன் – அசன்சோல் வடக்கு – 11,615
சந்திரமா பட்டாச்சார்யா – நிதி (தனிப்பொறுப்பு) – டம் டம் வடக்கு – 26,404
பீர்பஹா ஹன்ஸ்தா – வனத்துறை – பின்பூர் – 22,977
உஜ்ஜவல் பிஸ்வாஸ் – சிறைத்துறை நிர்வாகம் துறை அமைச்சர் – கிருஷ்ணாநகர் தெற்கு – 27,801
சுவபன் தேப்நாத் – கால்நடை வளர்ப்பு துறை அமைச்சர் – பூர்வஸ்தலி தெற்கு – 16,662
பெச்சாரம் மன்னா – விவசாய சந்தைப்படுத்தல் துறை அமைச்சர் – சிங்கூர் – 21,438




