6
October, 2026

A News 365Times Venture

6
Tuesday
October, 2026

A News 365Times Venture

சீவலப்பேரி : `கீழடியில கெடச்ச மாதிரியே இருந்துச்சு…' – `தாமிரபரணிக் கரை' வரலாற்றை ஆராயும் மாணவர்!

Date:

திருநெல்வேலி அருகே குப்பக்குறிச்சியைச் சேர்ந்த காலபெருமாள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் முதலாமாண்டு மாணவர். சிறுவயது முதலே பண்டைய நாகரிகம் குறித்தும், அந்தக் காலத்து மக்களின் வாழ்வியல் குறித்தும் இவருக்கு இருந்துவந்த ஆர்வம், தொல்லியல் துறைக்கு அழைத்துவந்து விட்டிருக்கிறது.

மேலும், தொன்மையான சீவலப்பேரி குறித்த தகவல்கள், காலபெருமாளை ஒரு நாள் தனது ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடத் தூண்டியது.

சீவலப்பேரி அருகே ஓடும் சிற்றாற்றின் கரையோரத்தில், தனது முன்னோர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படும் பகுதிகளைத் தேடத் தொடங்கியபோது, முதலில் கிடைத்தவை சிவப்பு, கருப்பு நிற மண்பாண்ட ஓடுகள், சிறிய மணிகள், குவார்ட்ஸ் கற்கள்.

“முதல் தடயம் கிடைச்சதும் இன்னும் கொஞ்சம் தேடிப் பார்க்கணும்னு தோணுச்சு. அடுத்தடுத்து தேடும்போது இன்னும் சில இடங்கள் கிடைச்சது.”

அந்தத் தேடலில்தான் எதிர்பாராத திருப்பம்.

பழங்கால செங்கல் கட்டுமானத்தின் தடயங்கள்!

கிடைத்த செங்கற்களை அளந்து பார்த்தபோது, சில செங்கற்கள் சுமார் 30 செ.மீ அகலம், 9 செ.மீ தடிமன், 39 செ.மீ-க்கும் அதிகமான நீளம் கொண்டிருந்தன. கீழடியில் கண்டறியப்பட்ட பெரிய செங்கற்களுடன் இவை ஒப்பிடத்தக்கதாக இருப்பது காலபெருமாளின் ஆர்வத்தை மேலும் அதிகரித்தது.

“அவ்வளவு பெரிய செங்கல் கிடைச்சது ஆச்சர்யமா இருந்துச்சு. இதே மாதிரி கீழடியிலயும் செங்கல் கிடைச்சிருக்குன்னு தெரியும். அதனால இதுவும் அதே காலகட்டத்தைச் சேர்ந்ததா இருக்குமோன்னு தோணுச்சு.”

ஆனால், இதன் காலத்தை உறுதிப்படுத்த அறிவியல் காலக்கணிப்பு அவசியம். அதற்காக மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

செங்கற்கள் மட்டுமல்ல… ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான நீலம், சிவப்பு, கறுப்பு நிற கண்ணாடி மணிகள், வட்டச்சில்லுகள், சுடுமண் காதணிகள், வளையல் துண்டுகள், செம்பு வளையல், சுடுமண் தக்களிகள், பூ வேலைப்பாடுகளுடன் கூடிய பானை ஓடுகள் எனப் பல பொருள்களும் கிடைத்துள்ளன.

அவற்றைப் பார்த்த காலபெருமாளுக்கு ஒரு எண்ணம்.

“2000 வருஷத்துக்கு முன்னாடியே இவ்வளவு சின்ன மணிகளைச் செய்திருக்காங்கன்னா, அவங்களோட தொழில்நுட்பம் எப்படி இருந்திருக்கும்? அங்கே வாழ்ந்த மக்கள் சாதாரணமா வாழல; அழகையும் கலைநயத்தையும் ரசிச்சு வாழ்ந்திருக்காங்கன்னு தோணுது.”

இந்தக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, தொல்லியல் துறைத் தலைவர் (பொறுப்பு) சி. சுதாகர், பேராசிரியர்கள் மற்றும் சுமார் 30 மாணவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர்.

ஆனால் இந்தப் பகுதியின் இன்னொரு முகம் கவலையளிக்கிறது.

பழங்கால செங்கல் கட்டுமானங்கள் இருந்த பகுதிகளில் மண் எடுக்கப்பட்டதால், பெரும்பாலான தடயங்கள் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

“இது அழியாமல் இருந்திருந்தா, இன்னொரு பெரிய கீழடியாக இருந்திருக்கலாம். இப்போ கொஞ்சம்தான் மிச்சம் இருக்கு.”

குப்பக்குறிச்சியிலிருந்து தாமிரபரணி கரையோரமாகச் சென்றால் சுமார் 20 கி.மீ தொலைவில் ஆதிச்சநல்லூர் உள்ளது. அங்கு புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடம் எங்கே என்பது இன்னும் முக்கியமான கேள்வியாக உள்ளது.

அந்தக் கேள்விக்கான விடையில் குப்பக்குறிச்சிக்கும் பங்கு இருக்குமா?

காலபெருமாளின் தேடல் இப்போது அவருடைய முன்னோர்களின் தடயத்தைத் தாண்டி, தாமிரபரணி கரையில் வாழ்ந்த பழங்கால மக்களின் வரலாற்றைத் தேடும் பயணமாக மாறியிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக ஆட்சியில் வேளாண்மைத் துறைச் செயலாளர் நியமனம் எப்போது?" – உதயநிதி கேள்வி

விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க ஆட்சியில், வேளாண்மைத் துறைச் செயலாளர் நியமனம் எப்போது?...

'பெட்டி வேட்பாளரின் போலிக் கண்ணீரை துடைப்பதற்காக நீளும் கரங்கள், ஏன் செவிலியர்களின்..!'- உதயநிதி

சமவேலைக்கு சம ஊதியம் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கும்...

செவிலியர்கள் விவகாரம்: “இரவு நேரத்தில் கைது… ஏற்றுக்கொள்ள முடியாதது" – பிரேமலதா விஜயகாந்த்

சமவேலைக்கு சம ஊதியம் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கும்...

விஸ்வரூபம் எடுக்கும் தற்கொலை வழக்கு; ​தலைமை தேர்தல் ஆணையர் மீது விசாரணை… கேரள அரசு தீவிரம்!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி...