18
April, 2026

A News 365Times Venture

18
Saturday
April, 2026

A News 365Times Venture

`சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ்' – 3 யூடியூப்பர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

Date:

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே ரீல்ஸ் எடுப்பதாக கூறி, 15 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வீடியோபதிவு செய்த புகாரில் தஞ்சாவூரை சேர்ந்த யூடியூப்பர் திவ்யா(வயது 36), ஈரோட்டை சேர்ந்த கீழக்கரை என்ற கார்த்திக்(30), கடலூரை சேர்ந்த சித்ரா(48), ஆனந்தராமன்(24) ஆகிய 4 பேர் மீது ஜனவரி 29-ம் தேதி போக்சோ வழக்குப்பதிவு செய்து, ஶ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான 4 பேருக்கும் ஜாமின் மனு இருமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 3 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. நாளையுடன் (மார்ச் 12) நீதிமன்ற காவல் நிறைவடைய உள்ளது.

குண்டர் சட்டத்தில் கைது

இந்த நிலையில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட திவ்யா, கார்த்திக், சித்ரா ஆகியோர் மீது ஏற்கெனவே பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க விருதுநகர் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் கண்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் திவ்யா, சித்ரா, கார்த்திக் ஆகிய 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், 3 பேரும் நேற்று குண்டர்‌சட்டத்தின்‌ கீழ் கைது செய்யப்பட்டனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"விஜய்க்குச் சரியான வழிகாட்டுதல் இல்லை" – தாடி பாலாஜி ஓப்பன் டாக்

கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி.செல்வகுமார் ஏற்பாட்டில் நடிகர் தாடி பாலாஜி...

”2 ஊற்று கிணறுகள், 300 பனை மரங்கள் அழிப்பு; யாரும் ஓட்டு கேட்டு வராதீர்கள்!"- போராடும் மீனவ கிராமம்!

பேராவூணி அருகே சரபேந்திரராஜன் பட்டினம் பஞ்சாயத்தில் மனோரா சுற்றுலாதளம் அமைந்துள்ளது. இங்கு...

"பிரதமரை மந்திரவாதி எனச் சொல்வது தரம் தாழ்ந்த பேச்சு.!" – ராகுல் காந்திக்கு கிரண் ரிஜிஜு கண்டனம்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா...