22
September, 2026

A News 365Times Venture

22
Tuesday
September, 2026

A News 365Times Venture

'சாரி சாரி பேச்சு வழக்குல..' – சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜியை மாப்பிள்ளை என அழைத்த அதிமுக எம்எல்ஏ

Date:

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒருபகுதியாக, சட்டமன்றத்தில் நகராட்சி நிர்வாக துறையின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.

அப்போது எழுந்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ கருப்பண்ணன், “தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல் நிறைய போடுகிறார்கள். அதில், EB கெபாசிட்டி 100 KV மட்டும்தான் அனுமதிக்கப்படுகிறது. வெயில் காலத்தில் மின்சாரம் போதவில்லை. அதனால், 100 KV-யை 120 KV-யாகக் கொடுத்தால் சௌரியமாக இருக்கும்.

கருப்பண்ணன்

அதனால், EB-க்கு எந்த இழப்பும் இல்லை. மாப்பிள்ளைக்கு நன்றாகத் தெரியும்.” என்று அமைச்சர் செந்தில் பாலாஜியைக் குறிப்பிட்டு பேசினார். உடனே அவையில் சிரிப்பலை எழ, “சாரி சாரி பேசிப் பேசி அப்படியே வந்துவிட்டது. 100 KV-யை 120 KV-யாகக் கொடுக்க அனுமதிக்க வேண்டும்.” என்று கோரிக்கையாகக் கூறி அமர்ந்தார்.

செந்தில் பாலாஜி

அதைத்தொடர்ந்து பதிலளித்த மாநில மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மிக விரைவாக அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகிறது. துறை அதிகாரிகளிடத்தில் பேசி அதற்கு ஆவணம் செய்யப்படும்” என்று கூறி அமர்ந்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மேட்டூர் அணை: “முதல்வர் விஜய் விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்க வேண்டாம்" – உதயநிதி விமர்சனம்

தவெக அரசு விவசாயிகளை வஞ்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்....

"ஆதவ் அர்ஜுனா என்ன அரசியல் நிபுணரா? 'லாட்டரி மாபியா' தானே?" – பொள்ளாச்சி ஜெயராமன் சாடல்

கோவை விமான நிலையத்தில் அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி...

'பணமா? ரூ.50, UPI பேமென்டா? ரூ.51' – எஸ்கேப் ரூட்டில் வியாபாரிகள்; MDR-ல் மாட்டும் கஸ்டமர்கள்?

உத்தரப்பிரதேசத்தின் காசிபாத் கடை வாசல்களில் கடந்த வார இறுதியில் சில நோட்டீஸ்கள்...

வீரமணி பாலியல் வழக்கு: “கம்யூனிஸ்டுகளின் நிலைபாடு என்ன?" – அமைச்சர் ராஜ் மோகன் கேள்வி

தவெக - இடதுசாரி கட்சிகளுக்கு மத்தியில் தற்போது வார்த்தை போர் நிலவிவருகிறது....