17
April, 2026

A News 365Times Venture

17
Friday
April, 2026

A News 365Times Venture

சாதிவாரி கணக்கெடுப்பு: "அதிகாரம் இருந்தும் திமுக செய்யவில்லை; ஆனால், மத்திய அரசு செய்கிறது" – ஓபிஎஸ்

Date:

நேற்று சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்ததை வரவேற்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்க வேண்டுமென்றால்,

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியது அவசியம் என்ற நிலை இருந்தபோதிலும், இதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருந்த நிலையிலும்,

இதன் அடிப்படையில் கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையிலும், இதனை நிறைவேற்ற தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

மோடி – ஓ.பி.எஸ்

மாறாக, சாதிவாரி கணக்கெடுப்பினை மத்திய அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தி.மு.க. அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

இதனைக் கண்டித்து நான் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் விடுத்தனர்.

இந்தச் சூழ்நிலையில், நேற்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக வெளி வந்துள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

மத்திய அரசின் இந்த முடிவினை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் மனதார வரவேற்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

வறுமையில் விழவிருக்கும் 25 லட்சம் இந்தியர்கள், ஐ.நா எச்சரிக்கை… என்ன செய்யப்போகிறது அரசு?

ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை,...

`ஹால்மார்க் அலுவலகத்தை எப்படி கையகப்படுத்த முடியும்? அரைவேக்காட்டுத்தனமாக..!' – செந்தில் பாலாஜி

மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக கரூர் திமுக மாவட்ட அலுவலகமான...

“உங்கள் மைக் மட்டும்தான் வேலை செய்யாமல் போகிறது" – ராகுல் குற்றச்சாட்டும் சபாநாயகர் பதிலும்!

பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தைத் திருத்துவதற்கும், தொகுதி மறுவரையறை ஆணையத்தை அமைப்பதற்கும்...