17
July, 2026

A News 365Times Venture

17
Friday
July, 2026

A News 365Times Venture

கோவை தவெக-வில் உட்கட்சி மோதல்; சாலையில் மோதிக்கொண்ட இரு தரப்பினரால் பரபரப்பு!

Date:

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் நேற்றிரவு கணியூர் பகுதியில், தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு வாகனத்தில் சென்றபடி நன்றி தெரிவித்தார்.

அப்போது அங்கு திரண்ட த.வெ.க-வினர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமாருக்கு மாலை அணிவிக்க முயன்றனர். அக்கட்சியைச் சேர்ந்த வசந்தி என்ற நிர்வாகியை, த.வெ.க-வைச் சேர்ந்த மற்றொரு தரப்பு நிர்வாகிகளே மாலை அணிவிக்க விடாமல் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் முன்னிலையிலேயே இருதரப்பினரும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

த.வெ.க மோதல்

இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் பேசிக் கொண்டு இருந்த போதே, த.வெ.க-வினர் இடைமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டமன்ற உறுப்பினர் அப்பகுதியில் இருந்து நகர்ந்து சென்றார்.

இதனைத்தொடர்ந்து இரு தரப்பைச் சேர்த்த த.வெ.க-வினரிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், தன்னை த.வெ.க நிர்வாகிகள் தாக்கியதாக அக்கட்சியைச் சேர்ந்த வசந்தி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.

இந்த மோதல் விவகாரம் குறித்து சூலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"Iran போரை நீட்டிக்க அமெரிக்க மக்களிடம் 'இதை' செய்கிறது இஸ்ரேல்"- அமெரிக்க துணை அதிபர் குற்றச்சாட்டு

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பின், மீண்டும் ஈரான் போர் தொடங்கியதற்கு மிக...

Operation Toofan-காக கேரளத்தில் ஒன்றிணையும் விஜய், மோகன்லால்; கேரள முதல்வரின் திட்டம் என்ன?

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கேரள அரசு ஆப்பரேஷன் தூஃபான் திட்டத்தைச்...

Dark web-ல் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவுகள் கசிவு; பாதுகாப்பிற்கு என்னென்ன அச்சுறுத்தல்கள்?

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது கூடங்குளம் அணுமின் நிலையம். இது ரஷ்ய நாட்டின்...

`இரானின் துருப்புச்சீட்டு' – போர்  நிறுத்த  மீறல்களும், மீண்டும் வெடித்த இரான்  அமெரிக்க மோதல்களும்!

மேனாள் ஆசிரியர், பிபிசி உலகசேவை, லண்டன். கட்டுரையாளர் : மணிவண்ணன் திருமலை இரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல்  தாக்குதலை...