19
June, 2026

A News 365Times Venture

19
Friday
June, 2026

A News 365Times Venture

குறுக்கே நிற்கும் இஸ்ரேல்: தள்ளிப்போகும் அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தை

Date:

நேற்று முன்தினம் (ஜூன் 17), அமெரிக்கா, ஈரான் இடையே 14 புள்ளிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திடவில்லை. இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்கு பிடிக்கவில்லை என்றும் தெரிய வருகிறது.

அமெரிக்கா, ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் புள்ளியே, ‘லெபனான் உள்ளிட்ட எங்கேயுமே இரு நாடுகளும் தாக்குதல் நடத்தக் கூடாது’ என்பது தான்.

தங்களால் லெபனான் மீது தாக்குதல் நடந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது ஈரான்.

ஆனால், இஸ்ரேல் நேற்று நள்ளிரவு, இன்று காலை என லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ட்ரம்ப் – மசூத் பெசெஷ்கியான் கையெழுத்து

இதனால், ஸ்விட்சர்லாந்தில் நடக்கவிருந்த அமெரிக்கா, ஈரான் போர் நிறுத்த டெக்னிக்கல் பேச்சுவார்த்தை தள்ளி சென்றுள்ளது.

பேச்சுவார்த்தைக்காக தங்களது குழுவை ஸ்விட்சர்லாந்திற்கு அனுப்பியிருக்க வேண்டும் ஈரான். ஆனால், லெபனான் மீதான தாக்குதலால் தங்களது குழுவை ஈரான் அனுப்பவில்லை என்று அறிக்கைகள் கூறுகின்றன.

ஈரான் போரை விரைவில் முடிக்க அமெரிக்கா முனைப்புடன் இருக்கிறது. ஈரான் இதை தங்களுக்கு சாதகமாக சற்று மாற்றி போரை முடிக்க வேண்டும் என்று ஈரானும் நினைக்கிறது.

ஆனால், இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பதாகத் தெரியவில்லை.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

7 எம்.எல்.ஏக்களுக்கு 5 பேருந்துகள்! – MLA ஸ்பெஷல் பஸ் நடைமுறை தேவையா?

சட்டமன்றக் கூட்டத்தொடர்கள் நடக்கும் போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கென சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்....

தவெகவில் இணைந்த சி.மகேந்திரன்: 'அமைப்பு விதிகளுக்கு விரோதமாக செயல்பட்டவர்' – CPI கருத்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் சி.மகேந்திரன் நேற்று தவெகவில் இணைந்தார்....

"மோடி, ஜின்பிங் எனக்கு பிடித்தவர்கள்; நெதன்யாகுவை கொஞ்சம் நிதானமாக.!" – ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க செய்தி நிறுவனமான Axios-க்கு பிரத்யேக பேட்டி...

'வெல்லும் வரை ஒன்றிணைந்து போராடுவோம்' – ஸ்டாலின் சொன்ன பிறந்த நாள் வாழ்த்திற்கு ராகுல் காந்தி பதில்

இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள். இந்திய...