29
May, 2026

A News 365Times Venture

29
Friday
May, 2026

A News 365Times Venture

'குதிரை பேரத்திற்கு விலைபோன துரோகி சத்யபாமா' – தாராபுரத்தில் கவனத்தை ஈர்க்கும் சர்ச்சை போஸ்டர்கள்

Date:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அ‌.தி.மு.க தரப்பில் பேட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்யபாமா.

எஸ்‌‌.பி வேலுமணி அணியில் இடம்பெறுவதாக ஆதரவு அளித்து வந்த நிலையில், திடீரென தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரைச் சந்தித்து கடிதம் கொடுத்தார்.

அதே கையோடு த.வெ.க- வில் இணைந்தார்‌‌. தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க- வில் இணைந்த விவகாரம் தமிழ்நாடு அளவில் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

சத்யபாமா அங்கம் வகித்த அ.தி.மு.க மட்டுமின்றி தொகுதி மக்களும் இவருக்கு எதிராக வினையாற்றி வருகின்றனர்.

தாராபுரத்தில் கவனத்தை ஈர்க்கும் சர்ச்சை போஸ்டர்கள்

இந்த நிலையில், ‘தாராபுரம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க தொண்டர்களின் வியர்வை சிந்திய உழைப்பில் வெற்றி பெற்று, MLA-ஆகி தற்போது TVK-வின் குதிரை பேரத்திற்கு விலைபோன துரோகி சத்தியபாமாவை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என தாராபுரம் தொகுதியின் பல இடங்களிலும் அ.தி.மு.க தாராபுரம் சட்டமன்றத் தொகுதி என்கிற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வரும் நிலையில், அவருக்கு எதிரான இந்தச் சுவர் விளம்பரங்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`கோவைக்கு மெட்ரோ, எங்கள் தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது; அதற்கான நடவடிக்கைகள்…'- அமைச்சர் சம்பத்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார், கோவை அரசு மருத்துவமனையில்...

'பிள்ளை பிடிப்பவர்களிடம் கவனமாக இருங்கள்..!' – நீலகிரி அதிமுக மா.செ சூட்சும அறிக்கை

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் பலர் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில்...

சர்ச், பள்ளி, டாஸ்மாக் மூணும் அடுத்தடுத்து.! 'எப்ப சார் கடையை மூடுவீங்க?' கேட்பது பெரம்பூர் மக்கள்!

``பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும்...