9
July, 2026

A News 365Times Venture

9
Thursday
July, 2026

A News 365Times Venture

கரூர்: `தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா தவெக அரசு?'- சிபிஎம் சண்முகம்

Date:

நாளை (ஜூலை 10) கரூர் செல்லும் முதல்வர் விஜய், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியிருக்கிறார்.

முதல்வர் விஜய் – கரூர் சம்பவம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள் ஏற்கனவே கரூர் வருகை தந்திருந்தபோது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோக சம்பவம் நடந்தது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்போவதாகத் தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது. தவெக பிரச்சாரத்தின் போது இறந்தவர்கள் என்பதால், தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்கிற நியாயமான கேள்வி முன் வருகிறது.

மேலும், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இப்படியான அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்.

சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது என்பது வேறு, அரசு வேலை வழங்குவது என்பது முற்றிலும் வேறானது.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

எனவே, பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக முறையான ஒரு பொது வழிகாட்டுதலை (Guidelines) அரசு உருவாக்க வேண்டும். அதுவரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும்” என வலியுறுத்தியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விடைபெறுகிறார் ஈரான் உச்சத் தலைவர் காமேனி: இறுதி ஊர்வலத்தின் முக்கிய தருணங்களின் தொகுப்பு!

பிப்ரவரி 28, 2026...ஈரான் உச்சத் தலைவரான அயோதுல்லா அலி காமேனியின் மூச்சை...

திண்டுக்கல்: குடிநீர் தட்டுப்பாடு; காலி குடங்களுடன் சாலை மறியலில் இறங்கிய பெண்கள்!

திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 41 மற்றும் 42-வது வார்டுகளில் வாட்டர் டேங்க்...

`கல்விக்கூடங்கள் அரசியல் மேடையோ புகழ் பரப்பும் இடமோ அல்ல; இனி யாருக்கும்..!' – அமைச்சர் ராஜ்மோகன்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்...

சுயதொழில் தொடங்க ஆசையா? – தமிழ்நாடு அரசின் 4 அதிரடி தொழில் மேம்பாட்டுப் பயிற்சிகள் – முழு விவரம்!

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII),...