25
October, 2026

A News 365Times Venture

25
Sunday
October, 2026

A News 365Times Venture

"கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு ரூ.30-க்கு விற்றுக் கொள்ளை அடிப்பதுதான் மாற்றமா?" – உதயநிதி சாடல்

Date:

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு சன்னரகப் பொன்னி அரிசியாக த.வெ.க. அரசு விற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “மக்களுக்கான கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்றுக் கொள்ளை அடிப்பதுதான் Dummy CM சொன்ன மாற்றமா?

அரிசி விலையேற்றத்துக்கான தீர்வாக, கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசியை ரூ.30-க்கு வாங்கலாம் என்று இந்த அரசு அறிவித்தது.

அரிசி

அதை நம்பி ரேஷன் கடைகளுக்குப் போனால், வழக்கமாக வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு, சன்னரகப் பொன்னி அரிசி என்று விற்கப்படுவதாக தமிழ்நாடெங்கும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல இடங்களில் அரிசியைத் திருப்பிக்கொடுத்தும் வருகின்றனர்.

கரூர் பாணியில்…

கம்பத்தில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்பட்டதால், த.வெ.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது, கரூர் பாணியில் ஓட்டமெடுத்திருக்கிறார் அந்த எம்.எல்.ஏ.

தமிழ்நாட்டில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கும்போது, வெறும் 250 இடங்களில் – அதுவும் குடும்பத்துக்குத் தலா 5 கிலோ மட்டும் என, சன்னரகப் பொன்னி என்ற பெயரில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

2007-ல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தபோது, அன்றைய முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சிறப்புப் பொதுவிநியோகத் திட்டத்தை அறிவித்து, வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்கினார்கள்.

ஆனால், இந்தக் கோமாளி அரசு, சன்னரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை?

என்ன விலைக்கு அவர்கள் அரசுக்கு பொன்னி அரிசியை வழங்கினார்கள்? த.வெ.க. அரசு பொதுமக்களுக்கு எவ்வளவு மானிய விலையில் அரிசியை வழங்குகிறது? இதுகுறித்து பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப்படைத்தன்மையுடன் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Dhanush: 'அவர் இறங்குனா CMதான்!' – கொட்டும் மழையில் தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி கூட்டம்

சென்னை OMR இல் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தனுஷ் தனது...

வாடகை வீட்டில் இருக்கிறீர்களா? உரிமையாளர் – வாடகைதாரர் உரிமைகள் என்ன? சட்டம் சொல்வது என்ன? – 6

“அடுத்த மாசத்துக்குள்ள வீட்டைக் காலி பண்ணிடுங்க!”வீட்டு உரிமையாளர் இப்படிச் சொல்லிவிட்டால், ஏற்கெனவே...

Mecca, Medina-ல் ஹூதி ஏவிய ஏவுகணையின் சிதறல்கள்? சவூதி பகிர்ந்த போட்டோ; ஹூதி சொல்வது என்ன?

மத்தியக் கிழக்கில் சவூதி அரேபியா மற்றும் ஏமனின் ஹூதிப் படைக்கு இடையே...

கேரளம்: பீஃப்-க்கு எதிரான வீடியோ; மத வெறுப்பைப் பரப்பிய வட இந்தியா Vlogger; வழக்கு பதிந்த போலீஸ்

வட இந்தியாவைச் சேர்ந்த யூடியூபர் அம்ரித் சிங் டேரன்.இவர் கேரளா பயண...