6
August, 2026

A News 365Times Venture

6
Thursday
August, 2026

A News 365Times Venture

'கடைகளில் UPI பயன்படுத்தி பணம் செலுத்துகிறீர்களா?' – அதற்கு இனி மத்திய அரசு கட்டணம் வசூலிக்கலாம்

Date:

இதுவரை Paytm, கூகுள் பே, போன் பே மூலம் பேமெண்ட் செய்யும் போது, நேரடியாக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட்டது இல்லை. இனி வசூலிக்கப்படலாம்.

இதற்கு காரணம், கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4), மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2007-ஆம் ஆண்டின் ‘பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைமைச் சட்டத்தில்’ திருத்த மசோதா ஆகும்.

இந்த மசோதாவின் கீழ் மத்திய அரசு வணிகர்களிடம் இருந்து MDR வசூலிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Merchant Discount Rate (வணிகர் தள்ளுபடி கட்டணம்) என்பதன் சுருக்கமே MDR.

நிர்மலா சீதாராமன்

தற்போதிருக்கும் சட்டத்தின் படி, UPI பயன்படுத்துபவர்களிடம் இருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ வங்கிகளோ அல்லது கட்டணச் சேவை நிறுவனங்களோ எந்தவொரு கட்டணத்தையும் வசூலிக்க முடியாது.

அதனால், மேலே கூறியுள்ள சட்டத்தில் உள்ள பிரிவு 10A-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இந்தத் திருத்தம் மேற்கொள்ளபட்டால், இனி மத்திய அரசினால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்பட முடியும்.

வணிகர் தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் ஆகும். வாடிக்கையாளர்கள் வணிகர்களுக்குப் பேமெண்ட் செய்யும்போது, வணிகர்களிடம் இருந்து குறிப்பிட்ட சதவிகிதத் தொகை கட்டணமாகக் கழிக்கப்படும்.

இந்தத் திருத்தத்தின் கீழ், குறைந்த மதிப்புடைய பரிவர்த்தனைகளுக்கு விலக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'எத்தனை நாளுக்குதான் சேகர் பாபுவே.!' – அங்கலாய்த்த திமுக எம்.எல்.ஏ; சட்டமன்ற ஹைலைட்ஸ்!

சட்டமன்றத்தில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையொட்டி சட்டமன்ற வளாகத்தில்...

ஆடிக்கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்த சேகர் பாபு – தடுத்து நிறுத்திய போலீஸ்

ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவையொட்டி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்...

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையில் யாருக்கு என்னென்ன துறைகள்?

புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணியுடன் 2026 தேர்தலில் வெற்றிபெற்ற ரங்கசாமி, மே மாதம் 13-ம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார்....

வேளாண் பட்ஜெட்: "பழைய பட்ஜெட் புத்தகத்தையே திருப்பி வாசித்திருக்கின்றனர்" – MRK பன்னீர்செல்வம்

இன்று தங்களுடைய முதல் வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது தவெக அரசு....