21
September, 2026

A News 365Times Venture

21
Monday
September, 2026

A News 365Times Venture

`கடும் மோதல்' வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் F-16 போர் விமானம்!

Date:

பாகிஸ்தானின் அதிவேக சூப்பர்சோனிக் விமானமான  F-16 போர் விமானத்தை இந்தியாவின் தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணைகள் வீழ்த்தியுள்ளதாக என்.டி.டி.வி தளம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீரில் விமான நிலையத்தைத் தாக்கும் முயற்சியில் ஈடுபட்ட F-16 போர் விமானத்தை இந்தியா வீழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய தளமான சர்கோதா விமான தளத்தில் இருந்து இந்த விமானம் செலுத்தப்பட்டுள்ளது. சர்கோதா தளத்துக்கு அருகாமையிலேயே Surface-to-air missile மூலம் இதனை சுட்டு வீழ்த்தியுள்ளது இந்தியப் படை.

பாகிஸ்தான் விமானப்படையில் சீனா மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த போர் விமானங்கள் உள்ளன. இவற்றுள் மிகவும் முக்கியமானது F-16 வகை விமானங்கள்.

கடும் மோதல்

பாகிஸ்தான் ராணுவம் ஜம்முவில் உள்ள ஆர்.எஸ். புரா, அர்னியா, சம்பா மற்றும் ஹிராநகர் ஆகிய பகுதிகளில் தீவிரமாக குண்டுமழைப் பொழிந்து வருகிறது.

பஞ்சாப் – பாகிஸ்தான் எல்லையில் உள்ள பதான்கோட் நகரில் பாகிஸ்தான் பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. சண்டிகரில் அபாய எச்சரிக்கை ஒலிக்கப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் நகரங்களில் இந்தியா தாக்குதல் நடத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அட்டைப்படம்

Source link

சீண்டும் பிரவீன்… சீறும் பெருந்தகை! – பிளானும் பின்னணியும்!

"ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக, ஏற்காதவர்களுடன் என்ன கூட்டணி?" எனக் கேட்டு...

'நாம ஏன் இறங்கிப் போகணும்' – அதிமுக-வுக்கு செக்… பாமக முடிவின் பின்னணி என்ன?

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என...

“சென்னை விமான நிலையம் தனியார்மயமாகிறதா?" – அமைச்சர் நிர்மல் குமார் பதில்

டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களை ‘ஜிஎம்ஆர்’ நிறுவனம் நிர்வகித்து...