24
August, 2026

A News 365Times Venture

24
Monday
August, 2026

A News 365Times Venture

`என் சிறுநீரகம் ரூ.75000, கல்லீரல் ரூ.90000'- கடனை அடைக்க உறுப்புகளை விற்கப்போவதாக விவசாயி போராட்டம்

Date:

மகாராஷ்டிராவில் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். நாட்டிலேயே அதிக விவசாயிகள் தற்கொலை செய்யும் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மகாராஷ்டிராவில் தற்போது ஆட்சி செய்யும் பா.ஜ.க கூட்டணி தெரிவித்து இருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாய கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டது. மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இது தொடர்பாக முறைப்படி அறிவிப்பு வெளியிட்டதோடு விவசாயிகள் தங்களது கடனுக்கான மாதாந்திர தவணையை சரியாக கட்டவேண்டும் என்றும், விவசாயிகளின் கடனுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

மாநில அரசு தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால், பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. வாசிம் மாவட்டத்தில் உள்ள அடோனி என்ற கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற விவசாயி கடன் வாங்கி இருந்தார். அரசு அதனை தள்ளுபடி செய்யும் என்று எதிர்பார்த்தார். ஆனால் மாநில அரசு கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறிவிட்டதால், விவசாயி சதீஷ் தனது வங்கிக் கடனை அடைக்க தனது உடல் உறுப்புகளை விற்பனை செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஒவ்வொரு உடல் உறுப்பும் என்ன விலை என்று எழுதி கழுத்தில் தொங்கவிட்டபடி சதீஷ் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளார்.

அதில் தனது சிறுநீரகத்திற்கு ரூ.75 ஆயிரமும், கல்லீரலுக்கு ரூ.90 ஆயிரமும், கண்ணிற்கு ரூ.25 ஆயிரமும் நிர்ணயித்து இருக்கிறார். அவரது போராட்டம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதோடு சமூக வலைதளத்திலும் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

இது குறித்து சதீஷ் கூறுகையில், ”தேர்தலுக்கு முன்பு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இப்போது நாங்கள்(விவசாயிகள்) கடனை அடைக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். எங்களிடம் எதுவும் இல்லாத பட்சத்தில் எங்களால் எப்படி கடனை திரும்ப செலுத்த முடியும். எனவே வேறு வழியில்லாததால் எனது உடல் உறுப்புகளை விற்பனை செய்கிறேன்” என்று குறிப்பிட்டார். அவர் தனது குடும்பத்தினரின் உடல் உறுப்புகளையும் விற்பனை செய்யப்போவதாக கூறி அதற்கான விலையையும் குறிப்பிட்டுள்ளார்.

மனைவியின் சிறுநீரகத்திற்கு ரூ.40 ஆயிரமும், மகனின் சிறுநீரகம் ரூ.20 ஆயிரமும், குழந்தையின் சிறுநீரகத்திற்கு ரூ.10 ஆயிரமும் நிர்ணயித்து இருக்கிறார். தனது உடல் உறுப்புகளை விற்றால் கடனை அடைக்க முடியாது என்பதால் தனது குடும்பத்தினரின் உடல் உறுப்புகளையும் விற்பனைக்கு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். சதீஷ் ஒரு லட்சம் ரூபாய் விவசாய கடன் வாங்கி இருந்தார். தேர்தலுக்கு முன்பு சொன்னபடி கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிற்கு கடிதம் எழுதி இருக்கிறார். இக்கடிதம் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அவர் தனது கடிதத்தில் கடனை அடைக்க முடியாது என்பதால் தற்கொலை செய்து கொள்வதை தவிர தனக்கு வேறு வழியில்லை என்றும், தன்னிடம் இருக்கும் இரண்டு ஏக்கர் நிலத்தில் போதிய மகசூல் மற்றும் விலை கிடைக்காத காரணத்தால் விவசாயம் செய்ய வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் விவசாயிகளுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு ரூபாய் விவசாய காப்பீடு திட்டத்தை ரத்து செய்வது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இத்திட்டத்தில் மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பதால் ஒரு ரூபாய் காப்பீடு திட்டத்தை ரத்து செய்ய அரசு பரிசீலித்து வருகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தமிழ்நாடு கனிம வளத்துறையில் அடுத்தடுத்து எழும் புகார்கள்: TAMIN இருக்கும்போது புதிய நிறுவனம் ஏன்?

தமிழ்நாடு அரசுக்கு முக்கியமான வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் கனிம வளத்துறையில்,...

"பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை..!"- உதயநிதி கண்டனம்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று...

குடியுரிமை: “3 நாடுகளுக்கு தூதுராக இருந்தேன்; எனக்கே இந்த நிலை…" – நவதீப் சிங் சூரி சொல்வதென்ன?

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இந்தியத் தூதராகவும்,...

புதுச்சேரி பட்ஜெட்: `21 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப பொருளாதார மண்டலம்!’ – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலையில் தொடங்கியது. காலை 9.30...