21
October, 2026

A News 365Times Venture

21
Wednesday
October, 2026

A News 365Times Venture

“என்னைத் தவறாக எடிட் செய்து பதிவிடுகிறார்கள்; தவெக அரசு நடவடிக்கை எடுக்குமா?” – மேயர் பிரியா கேள்வி

Date:

சமூக வலைத்தளங்களில் தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதாக நேற்று (அக்டோபர் 20) சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார் சென்னை மேயர் பிரியா.

மேலும், இது சம்பந்தமாகத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வீடியோவும் வெளியிட்டுள்ளார் அவர்.

அந்த வீடியோவில் பிரியா, “கடந்த நான்கு ஆண்டுகளாகவே மேயர் என்றும், பெண் என்றும் பாராமல், அரசு மற்றும் மாநகராட்சி நிகழ்வுகள் அனைத்திலும் முதலமைச்சரின் இருக்கைக்கு அருகிலேயே எனக்கு இடம் அளித்து, எனது வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்து வழிநடத்தினார் ஸ்டாலின்.

மேயர் பிரியா, ஸ்டாலின்

மே மாதம் முதல்…

அதேபோல, அன்றைய அமைச்சரும் இன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அண்ணன், ஒரு சொந்தச் சகோதரியைப் போலக் கடந்த நான்கு ஆண்டுகளாக எனக்குத் துணையாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார்.

ஆனால், இன்றைக்கு ஆட்சி அமைத்துள்ள தவெக அரசு, மே மாதம் முதல் மாநகராட்சி சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு மக்கள் நலப் பணிகளை ரத்து செய்தும், நிறுத்தி வைத்தும் வருகிறது.

மாநகராட்சிக்கு வழங்கப்பட வேண்டிய உரிய நிதியையும் ஒதுக்கவில்லை. இத்தகைய நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு மேடைகளில் எங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறோம்.

எடிட் செய்து…

இதன் காரணமாக, தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளைக் கண்டித்து நான் மேடைகளில் பேசும்போதெல்லாம், அதற்கு மறுநாளே விர்ச்சுவல் அப்யூசர்ஸ் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் என்னை மிகவும் தவறாகச் சித்தரிக்கத் தொடங்குகிறார்கள்.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் தளங்களில் போலியாக எடிட் செய்யப்பட்ட வீடியோக்களைப் பரப்பி, எங்கள் கழகத்தைச் சேர்ந்தவர்களுடனேயே தவறான முறையில் தொடர்புபடுத்திப் பதிவிட்டு வருகிறார்கள். இத்தகைய பதிவுகள் பொதுமக்களிடையே பரவுவது எனது தனிப்பட்ட வாழ்க்கையையும் கடுமையாகப் பாதிக்கிறது.

இதுகுறித்துச் சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் ஏற்கனவே நான் புகார் அளித்திருந்தேன். ஆனால், இந்நாள் வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேயர் பிரியா
மேயர் பிரியா

எப்போது விடை கிடைக்கும்?

இன்றைக்கும் மீண்டும் என்னை இழிவுபடுத்திச் சமூக வலைத்தளங்களில் தவறான பதிவுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதற்காக இன்று மீண்டும் ஒரு புகாரைப் பதிவு செய்துள்ளேன். தற்போதைய தவெக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பெண்களுக்கான பாதுகாப்பு, பெண்களுக்கான உரிமை என்று மேடைகளில் நிறையப் பேசியவர்கள், ஒரு மேயராகவும் பெண்ணாகவும் இருக்கக்கூடிய நான் இத்தனை முறை முறையிட்டும், இதுவரை மௌனம் காக்கும் முதலமைச்சராகவே இருக்கிறார்.

இதற்கு எப்போது விடை கிடைக்கும் என்ற கேள்வியை இந்த இடத்தில் நான் முன்வைக்கிறேன்.

தவெக அரசின் அரசியல் வியூகமா?

எங்களது கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் பெண்களுக்கான பாதுகாப்பையும் வளர்ச்சியையும் மையமாகக் கொண்டே ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நடத்தினார்கள். அதன் மூலம் எத்தனையோ பெண்கள் பயன்பெற்றுள்ளார்கள்.

ஆனால், இன்றைய தவெக அரசு ‘பெண்கள் பாதுகாப்பு’ என்று வெறுமனே பேசிக்கொண்டு, தங்கள் ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ மூலமாகத் தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு சூழலையே உருவாக்கி வருகிறது. இதுதான் தவெக அரசின் அரசியல் வியூகமா?

முதலமைச்சரோ, அமைச்சரோ கண்டித்தது உண்டா?

சமீபத்தில் சென்னையில் மாமன்ற உறுப்பினராக இருக்கும் ஒரு சகோதரி மேடையில் பேசியபோது, அவர் பேசிய தவறான கருத்தை அதே மேடையில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், மாவட்டக் கழகச் செயலாளருமான பி.கே. சேகர்பாபு அண்ணனும் உடனுக்குடன் கண்டித்தார்கள்.

ஆனால், தவெக நிர்வாகிகள் அல்லது ஆதரவாளர்கள் செய்யும் தவறை அந்த முதலமைச்சரோ அல்லது அவர்களது அமைச்சர்களோ என்றாவது கண்டித்தது உண்டா?

தொடர்ந்து இணையவழி அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி, பெண்களை இழிவுபடுத்தித் தவறாகச் சித்தரிக்கும் அரசாகவே இன்றைய அரசு செயல்படுகிறது. இது முற்றிலுமாகக் கண்டிக்கத்தக்கது.

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல்…

இத்தகைய செயல்கள், இனி அரசியலுக்கு வர விரும்பும் பெண்களுக்கு ஒரு பயத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்தும்.

இருப்பினும், எனது கழகத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர் ஆகியோரின் முழுமையான ஆதரவு எனக்கு என்றும் இருக்கிறது. இந்த அச்சுறுத்தல்களுக்கெல்லாம் அஞ்சாமல், தொடர்ந்து மக்களுக்கான பணிகளை நான் உறுதியோடு செய்வேன்” என்று பேசியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

புதுச்சேரி காவலர் தினம்: பணியின்போது உயிர்நீத்த 9 காவலர்கள்; 21 குண்டுகள் முழங்க அஞ்சலி | Photos

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி திருமேனிநாதர்: காலையில் தரிசனம் செய்தாலே அஸ்வமேத யாகம்...

'மெக்கா மசூதியில் ஒழுக்கக்கேடு செயல்' – வங்கதேச தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவூதி

சவூதி அரேபியாவில் வங்கதேசத்தைச் சேர்ந்த தம்பதியினருக்குக் கடந்த வாரம் மரண தண்டனை...

France Protests: தெருக்களில் தீப்பிழம்புகள் – திண்டாடும் 9 நாடுகள்… அலறும் ஐரோப்பா கண்டம்!

​அமைதியின் சொர்க்கமாகவும், சட்டம்-ஒழுங்கு மற்றும் மனித உரிமைகளின் உலகளாவிய கேந்திரமாகவும்...