18
September, 2026

A News 365Times Venture

18
Friday
September, 2026

A News 365Times Venture

"எங்க அப்பா கோவக்காரர்; நான் திமுகவில் சேர்ந்துவிடுகிறேன் என்று சொன்னவர் துரை வைகோ.!"- கே.என் நேரு

Date:

மதிமுக எம்.பி துரை வைகோ நேற்று முன்தினம் (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்தப்போது, “திமுக என்ன மன்னர் கட்சியா? அவர்கள் கொடுக்கும் பிச்சையை பெற்றுத்தான் எம்.பி. ஆக வேண்டுமா?

தனது எம்.பி பதவி அப்படியே திமுக பிச்சை போட்டதாக வைத்துக்கொண்டாலும், கொளத்தூரில் திமுக தலைவருக்கே மக்கள் பிச்சை போடவில்லையே.. அதற்கு என்ன பதில்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் இன்று (செப். 17) செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவிடம் துரை வைகோ பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

துரை வைகோ

அதற்கு பதிலளித்த அவர், ” நான் திமுகவில் சேர்ந்துவிடுகிறேன் என்று எங்களிடம் சொன்னவர்தான் துரைவைகோ. எங்கள் அப்பா கோவக்காரர், என்னால் கட்சி நடத்த முடியாது என்றார். சின்னப் பிள்ளையாக இருந்துக்கொண்டு ரொம்ப அதிமுகமாக பேசுகிறார் துரை.

எங்களின் வளர்ச்சி நின்று போய் விட்டது என்கிறார். வெற்றி அடைந்த வேட்பாளர் அவர்களுடன் சென்றிருந்தால் வளர்ச்சி வந்திருக்குமா? எனத் தெரியவில்லை. கடுமையாக தான் பேசுகிறார். அது நியாயமில்லை. தளபதி ஸ்டாலினை பற்றி வயதில் சிறியவராக இருக்கும் துரை வைகோ பேசலாமா? மிசா காலத்தில் அவர் பிறந்திருக்கவே மாட்டார்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

செங்கோட்டையனை சுத்துப்போடும் த.வெ.க-வினர் டு மனம் வருந்தும் திருமா | கழுகார் அப்டேட்ஸ்

சஸ்பென்ஸ் வைக்கும் பாமக!இலையா... சூரியனா...மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல்...

"உங்களுக்கு கிடைக்கும் மரியாதையும், செல்வாக்கும் தகுதியானதே!" – மோடிக்கு புதின் பிறந்தநாள் வாழ்த்து

இன்று இந்தியப் பிரதமர் மோடியின் பிறந்தநாள்.மோடி, ரஷ்ய அதிபர் புதின் அரசியலையும்...

கட்டாய PF வரம்பு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்வு; நீங்கள் பயன்பெறுவீர்களா? தெரிஞ்சுக்கோங்க!

PF விஷயத்தில் ஒரு ‘குட் நியூஸ்’ சொல்லியுள்ளது மத்திய அரசு.PF -...

'முதல்வர் விஜய்யின் லண்டன் பயணமும் கேள்விக்குறியான வெளிப்படைத்தன்மையும்!'

முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றிருந்தார். ஒரு வார பயணத்தை...