18
March, 2025

A News 365Times Venture

18
Tuesday
March, 2025

A News 365Times Venture

எங்கள் கோரிக்கையில் இது கட்டாயம் இடம்பெறும்' – உக்ரைனுடனான போர் நிறுத்தம் குறித்து ரஷ்யா

Date:

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த மும்முரமாக செயல்பட்டு வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

கடந்த வாரம் நடந்த அமெரிக்கா – உக்ரைன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ’30 நாட்கள் உடனடி போர் நிறுத்த’த்திற்கு ஒப்புக்கொண்டது உக்ரைன் அரசு. இதனையடுத்து ரஷ்யாவிற்கு பயணமானார்கள் அமெரிக்க அதிகாரிகள். அங்கேயும் கிட்டதட்ட பச்சை கொடி தான்.

போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்து கடந்த வாரம் ரஷ்ய அதிபர் புதின் செய்தியாளர்கள் மத்தியில் பேசியிருந்தார்.

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்யும் அமெரிக்கா!

அமெரிக்கா – ரஷ்யா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பேசும்போது, “போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, உக்ரைன் நேட்டோ படையில் சேரக்கூடாது என்பதை கட்டாயம் கேட்போம்” என்று கூறியுள்ளார். மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்தப் போரின் ஆரம்பமே, உக்ரைன் நேட்டோ படையில் சேர வேண்டும் என்றதால் தான். ஆக, போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், இது ஒரு மிக முக்கிய கோரிக்கையாக இருக்கும்.

போர் நிறுத்தம் குறித்து இந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் தொலைப்பேசியில் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Trek Tamilnadu: `3 மாதங்களில் ரூ.63.43 லட்சம் வருவாய்; அர்த்தமுள்ள சுற்றுலா' – முதல்வர் ஸ்டாலின்

கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு சார்பில் 40 இடங்களில் மலையேற்றம்...

தென்காசி: அரசு அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட முன்னாள் முதல்வர் புகைப்படம்; அதிமுக-வினர் கண்டனம்!

தென்காசி நகரப் பகுதியில் புது பஸ்டாண்ட் செல்லும் வழியில் வருவாய் கோட்டாட்சியர்...