11
March, 2026

A News 365Times Venture

11
Wednesday
March, 2026

A News 365Times Venture

`எங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம்..!' – அன்புமணி ராமதாஸ்

Date:

தங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கிறார்.

தாம்பரத்தில் நேற்று (மார்ச்.10) பாமக சார்பில் மகளிர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசியிருக்கும் அன்புமணி ராமதாஸ், ” கடந்த ஆறு மாதங்களாக நடக்கும் எல்லா விஷயங்களையும் நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். அது எல்லாவற்றையும் நாம் கடந்து வந்துவிடுவோம்.

அன்புமணி ராமதாஸ்

ஐயா (ராமதாஸ்) ஒரு சமூக சீர்த்திருத்தவாதி. நமக்கு எல்லாம் குலதெய்வம், குலவிளக்கு ஐயா தான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஐயா இன்றைக்கு 10 வயது குழந்தை மாதிரி ஆகிவிட்டார்.

அதைப் பயன்படுத்திக்கொண்டு சுற்றி இருக்கும் தீய சக்திகள், துரோகிகள், திமுக கைக்கூலிகள் எல்லாம் சேர்ந்து அவர் மனதை கெடுத்து எங்கள் குடும்பத்தை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

ஆனால் இதையெல்லாம் கடந்து இந்தக் கட்சி, தமிழ் சமுதாயம், பெண்கள் பாதுகாப்பு எல்லாம் நமக்கு முக்கியம். ஆனால் நான் பலமாக இருக்க நீங்கள் தான் காரணம். தமிழ்நாட்டில் இருக்கும் பெரிய பெரிய தலைவர்களுக்கு கிடைக்காத தம்பி, தங்கைகள் எனக்கு கிடைத்திருக்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இனி 'இந்த' நிலம், வீடு பத்திரப் பதிவுகளுக்கு பான் கார்டு தேவையில்லை!

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், புதிய வருமான வரிச் சட்டம்...

அமெரிக்காவிற்கு பெரும் சிக்கலாகும் ஈரான் 'டிரோன்கள்' – உக்ரைனுக்கு 'நோ' சொன்ன விளைவு இது!

அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே வளர்ச்சி, பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்திலும் மிகப்பெரிய...

பாஜக கூட்டணியில் தவெக? "EPS-ஸிடம்தான் கேட்க வேண்டும்; ஏனென்றால்" – பியூஸ் கோயலின் பதில் என்ன?

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக...

எம்ஜிஆர், ஜெயலலிதா சாதித்தது பழனிசாமியால் சாத்தியாமா? | ‘வாவ்’ வியூகம் 09

எம்ஜிஆர், ஜெ. சாதித்தது பழனிசாமியால் சாத்தியாமா?‘வாவ்’ வியூகம் 09திமுக பெருந்தலைகள் ஆரம்ப...