12
June, 2026

A News 365Times Venture

12
Friday
June, 2026

A News 365Times Venture

`ஊழல் செய்பவர்கள் 6 மாதத்திற்குள் வழிக்கு கொண்டுவரப்படுவார்கள்' – நிர்வாகிகளிடம் ஜான் ஆரோக்கியசாமி

Date:

தவெகவின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற்றது.

கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்மட்ட அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு பதிலளித்த பேசியுள்ள தவெகவின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, `முந்தைய ஆட்சிக் காலங்களில் உருவான நிர்வாக நடைமுறைகளை மாற்றுவதற்கு கால அவகாசம் தேவைப்படும்’ என்று கூறியுள்ளார்.

பனையூர் தவெக அலுவலகம்

`திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் பல அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் ஊழல் மற்றும் லஞ்ச கலாச்சாரத்திற்கு பழக்கப்பட்டு விட்டனர். அவர்களை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. தற்போது மேல்மட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டு நிர்வாக சீர்திருத்தங்களை முதல்வர் தொடங்கியுள்ளார். கீழ்மட்ட அதிகாரிகள் பலரும் கடந்த இரண்டு ஆட்சிகளிலும் பணியாற்றியவர்கள் என்பதால் உடனடியாக மாற்றம் ஏற்படாது’ என்றுள்ளார்.

`அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே கட்சி நிர்வாகிகள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். இன்னும் 6 மாதங்களுக்குள் லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளதாக’ கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஜான் ஆரோக்கியசாமி பேசியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' – முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின்...

`மேட்டூர் அணை வரலாற்றில் ஏற்பட்டுள்ள 62-வது ஆண்டு காலதாமதம் இது!' – அதிகாரிகள் சொல்வதென்ன?

காவிரி ஆற்றுப்படுகை பாசனத்தின் அடிப்படை ஆதாரமாகப் பங்காற்றி வருகிறது மேட்டூர் அணை....

கடலூர்: கிணறுகள் அமைக்க ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் திட்டம்; அரசுக்கு அன்புமணியின் கோரிக்கை என்ன?

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் 4 ஹைட்ரோ...

பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட தவெக நிர்வாகி; கண்டித்த அண்ணாமலை – தவெக ரியாக்ஷன் என்ன?

தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை...