5
October, 2026

A News 365Times Venture

5
Monday
October, 2026

A News 365Times Venture

உக்ரைன் போர்: இந்தியாவைப் பாராட்டும் புதின்; இந்தியாவின் திட்டத்திற்கு உக்ரைன் 'டிக்'; என்ன நடந்தது?

Date:

உலக நாடுகளுக்கு இடையே ‘நடுநிலை’ என்பதற்கு எப்போதுமே இந்தியாவிற்குத் தனிப்பெயருண்டு… சிறப்புண்டு.

இது ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்த முயற்சியில் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது.

இந்தியாவின் நிலைப்பாடே ‘போர் வேண்டாம்’ என்பதுதான்.

ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கியபோதும் சரி… ஈரான் போர் தொடங்கியபோதும் சரி… இந்தியா அறிவுறுத்தியதே ‘அமைதியை’தான்.

புதின் – மோடி

புதின் பாராட்டு

இந்தியப் பிரதமர் மோடியின் போர் நிறுத்த முயற்சியைக் குறித்து ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில், “உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தொடர்ந்து பேசி வரும் உலகத் தலைவர்களில் இந்தியப் பிரதமர் மோடியும் ஒருவர்.

இரு தரப்பிற்கும் ஏற்ற தீர்வுகளைச் சொல்வதில் மிகச் சிறந்த யோசனைகளும் மிகுந்த ஆர்வமும் கொண்டுள்ளார் அவர்.

அந்த வகையில், பிரதமர் மோடி நடுநிலையான ஒரு நிலைப்பாட்டையே எடுத்துள்ளார். அதேவேளையில், இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதில் அவர் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

இதை வெளிப்படையாகக் கூறுவது எனது கடமை என நினைக்கிறேன். பிரதமரின் நல்லெண்ண யோசனைகளுக்கு நாம் மிகவும் நன்றியுடையவர்களாக இருக்கிறோம்.

அமைதியான வழியிலும் கூடிய விரைவில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற அவரது ஆர்வத்திற்கு நமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பேசியிருந்தார்.

இது இந்தியாவின் ராஜதந்திரத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றே எடுத்துக்கொள்ளலாம். இன்னொரு பக்கம், மோடியும், புதினும் நண்பர்கள். அதனால், புதின் இப்படிப் பேசியிருக்கலாம் என்றுக்கூட ஒரு பேச்சு எழலாம்.

உக்ரைன் ‘டிக்’

இந்த இடத்தில் தற்போது உக்ரைன் எடுத்துள்ள முக்கியமான நிலைப்பாடு ஒன்றைக் கவனிக்க வேண்டும்.

‘ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு இந்தியா உதவி செய்கிறது’, ‘இந்தியர்களை ரஷ்யா சட்டத்திற்கு விரோதமாகப் போரில் பயன்படுத்துகிறது.

ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கி

இதைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு முன்னெடுக்க வேண்டும்’ என்று இந்தியாவைத் தொடர்ந்து சாடி வந்தது உக்ரைன்.

ஆனால், இப்போது ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு இந்தியா அளித்துள்ள திட்டத்தை ‘இரண்டு தரப்பிற்குமானது’ என்று டிக் செய்திருக்கிறது உக்ரைன்.

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தத்தைப் பல தரப்புகள் முயன்று வருகின்றன. இந்தப் போர் நிறுத்தத்திற்கான வரைவுத் திட்டத்தை இந்தியா, துருக்கி, எகிப்து மற்றும் அமெரிக்கா வழங்கியிருந்தன.

இதில் இந்தியா தந்த வரைவுதான் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது. அதில் போர் நிறுத்தம் மட்டும் இருக்கவில்லை.

ஆற்றல் மற்றும் துறைமுக உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள், கருங்கடல் பகுதியின் பாதுகாப்பு குறித்தும் இருக்கிறது என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கூறியிருக்கிறார்.

இந்தப் போரில் ரஷ்யா, உக்ரைனின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதும்… உக்ரைன், ரஷ்யாவின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதற்கான முற்றுப்புள்ளித் திட்டமும் இந்தியாவின் வரைவுத் திட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது போலும்.

இதைத் தாண்டி, இந்தியாவின் வரைவுத் திட்டத்தில் என்னென்ன இடம்பெற்றிருக்கின்றன என்பன இன்னும் வெளிப்படையாக… விளக்கமாகத் தெரியவில்லை.

வெளிப்படையாக… விளக்கமாக எதுவும் தெரியவில்லை என்றாலும், போரில் இருக்கும் இரண்டு நாடுகளின் ‘குட் புக்’கிலுமே இந்தியா தற்போது இடம்பெற்றிருப்பது பாராட்டுக்குரியது!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தாராபுரம்: முதல்வர் விஜய்க்கு மாட்டு வண்டி ஓட்டியவர் தேடப்படும் குற்றவாளியா? சர்ச்சை பின்னணி என்ன?

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் த‌.வெ.க வேட்பாளராக போட்டியிட்டுள்ள சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர்...

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: அனல் பறந்த இறுதிகட்ட பிரசாரம்!

துணை ராணுவத்தினர் அணிவகுப்பு துணை ராணுவத்தினர் அணிவகுப்பு Source link

CJP: `என்னையும், அபிஜீத், அசுதோஷ் போன்றவர்களையும் கைது செய்ய திட்டம்' – சௌரவ் தாஸ் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர...