4
July, 2026

A News 365Times Venture

4
Saturday
July, 2026

A News 365Times Venture

`இயக்கம் அழிந்தால்கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டுமென..'- அதிமுகவிலிருந்து வைகைச்செல்வன் விலகல்

Date:

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், ” அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன்.

ஒரு தலைவர் தானே அழிந்தால்கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இயக்கமும், கழகத் தொண்டர்களும் அழிந்தால்கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருப்பதில்லை.

எடப்பாடி பழனிசாமி

திமுகவோடு இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதன் மூலம், திமுக எதிர்ப்பு நிலையில் இருந்து அதிமுக சமரச போக்கில் போனதால் தனது அடையாளத்தை இழந்து விட்டது. சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பதன் காரணமாகவும், தனது வெற்றிப் பாதையில் இருந்து அதிமுக விலகிச் சென்று விட்டது.

மேலும், தேர்தல் களத்தில் நான் தனித்து விடப்பட்ட நிலையிலும் கூட, கழகத்திற்காக தேர்தல் பரப்புரையாற்றினேன். ஆனால், மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு என்பதை நான் உணாந்து கொண்டேன்.

‘ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று’

மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதைவிட, அவ்வாறு செய்யாததால் கெட்டான் என்று சொல்லப்படுதல் நன்று என்கிற வள்ளுவப் பேராசானின் வார்த்தைகளுக்கு நான் கீழ் படிகிறேன்.

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

மாணவப் பருவம் தொட்டு ரத்தமும், சதையுமாக இருந்து இந்த இயக்கத்தோடு பணியாற்றி தற்போது விலக வேண்டிய சூழ்நிலையை எண்ணிப் பார்க்கையில், என் மனதில் ஏற்படும் கடுமையான வலியை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை. நேரம் வருகிற போது இன்னும் இதுகுறித்து பேசுகிறேன் .

‘புதிய இடத்தில் நடுவதற்கு புடுங்கிப் போன செடியில் இருக்கும் பழைய மண்ணைப் போல’ இந்த இயக்கத்திற்காக ஆற்றிய என் பழைய நினைவுகளை என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

''எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல'' – கரூர் குறித்த அமைச்சர் ஆதவ் பேச்சுக்கு சிபிஐ வீரபாண்டியன் கண்டனம்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் நேற்று முன்தினம்...

ஆளுநர் அர்லேகரைச் சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

தமிழிக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்...

'சந்திப்புக்கு ஓகே சொன்ன முதல்வர்; பனையூரில் குவியும் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்!- விவரம் என்ன?

தவெகவில் இணையும் அதிமுகவினரை முதல்வர் விஜய் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை....

தமிழகத்தில் குதிரை பேரம், அதிகார துஷ்பிரயோகம்: ஆளுநரிடம் திமுக நேரில் புகார்!

தமிழகத்தில் தற்போதைய ஆட்சியில் குதிரை பேரமும், அதிகார துஷ்பிரயோகமும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக...