21
September, 2026

A News 365Times Venture

21
Monday
September, 2026

A News 365Times Venture

'இந்தியா பின்வாங்கினால்…' – ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர்

Date:

‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூருக்கு’ பதிலடி கொடுக்கப்படும்’ என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் இப்போது அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “கடந்த இரண்டு வாரங்களாகவே, இந்தியாவிற்கு எதிராக நாங்களாக எந்தத் தாக்குதலையும் தொடங்கமாட்டோம் என்று கூறி வருகிறோம்.

ஆனால், எங்கள் மீது தாக்குதல் நடந்தால், நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம். இந்தியா பின்வாங்கினால், நாங்களும் இந்தப் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவருவோம்” என்று பேசியுள்ளார்.

எல்லையில் இந்திய ராணுவம்

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் பஹல்காமுக்கு சுற்றுலா வந்த 25 பேரும், அவர்களை காப்பாற்ற சென்ற ஒரு உள்ளூர்வாசியும் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. அதற்கு பதிலடியாகத் தான் ‘ஆபரேஷன் சிந்தூர்’ -ஐ கையிலெடுத்துள்ளது இந்திய அரசு.

ஆசிப்பின் இந்தப் பதில், பாகிஸ்தான் தாக்குதலை முன்னெடுக்குமா… அல்லது பின்வாங்குமா? என்கிற எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

வீரமணி பாலியல் வழக்கு: "அவரிடம் அதிக நிதி வாங்கியதே…" – நிர்மலின் குற்றச்சாட்டுக்கு RS பாரதி பதில்

ஜெம் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு விவகாரம் தீவிரமாகி...

"மக்கள் தங்குவதற்கு கட்டடம் இருக்கு; ஆனால்…" – விகடன் செய்திக்கு எழும்பூர் மருத்துவமனை விளக்கம்

முதல்வர் விஜய் ஆய்வு நடத்திய எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பெண்களுக்கு...

TN 07 CM 2031: சர்ச்சைக்குள்ளான திருமாவளவன் பயணித்த கார் எண்; என்ன சொல்கிறது விசிக?

சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஈவிபி (EVP) பிலிம் சிட்டியில்,...