3
November, 2026

A News 365Times Venture

3
Tuesday
November, 2026

A News 365Times Venture

`இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது; பின், எதற்கு நம் டாலர்கள்?!' -எலான் மஸ்க்கை வழிமொழியும் ட்ரம்ப்

Date:

சமீபத்தில் தொழிலதிபர் மற்றும் அமெரிக்காவின் அரசு செயல்திறன் துறையில் அங்கம் வகிக்கும் எலான் மஸ்க், ‘இதுவரை இந்தியாவின் வாக்களிக்கும் சதவிகிதத்தை அதிகரிக்க அமெரிக்கா இந்தியாவிற்கு தந்து வந்த 21 மில்லியன் டாலர் நிதியை நிறுத்துவதாக’ அறிவித்திருந்தார்.

இதற்கு வழிமொழிவதைப் போல், நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “இந்தியாவிற்கு எதற்காக நாம் 21 மில்லியன் டாலர்கள் தருகிறோம்? அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது. உலகிலேயே அமெரிக்காவிற்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. அதிக வரி காரணத்தால் அமெரிக்கா இந்தியாவிற்குள் வணிகம் செய்வது மிக கடினம்.

எனக்கு இந்தியா மீதும், இந்தியாவின் பிரதமர் மீதும் மிகுந்த மரியாதை உள்ளது. அதற்காக, 21 மில்லியன் அமெரிக்கா டாலர்களை இந்தியாவில் வாக்களிப்பை அதிகரிப்பதற்காக கொடுப்பதா?’ என்று பேசியுள்ளார்.

Donald Trump – டொனால்ட் ட்ரம்ப்

எலான் மஸ்க்கின் இது சம்பந்தமான அறிவிப்பில் லிபிரியா, மாலி, வங்காளதேசம், நேபாளம் போன்ற நாடுகளுக்கும் கொடுக்கப்பட்டு கொண்டிருந்த நிதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நிதி ரத்து அறிவிப்பு தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் அமித் மாள்வியா, “வாக்களர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு 21 மில்லியன் டாலர்களா? இது நிச்சயம் இந்தியா தேர்தல் செயல்பாட்டில் வெளிப்புற தலையீடு ஆகும். இதனால் யாருக்கு லாபம்? நிச்சயம் ஆளும் கட்சிக்கு அல்ல” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விஜயபாஸ்கரை விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை: மனைவியும் நேரில் ஆஜராக சம்மன்!

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக)...

'எடப்பாடி பழனிசாமி அதிமுக-வை பூஜ்ஜியம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' – அமைச்சர் வன்னியரசு

மதுரை மாவட்டம். தீர்த்தகாடு பகுதியைச் சேர்ந்த 112 பேருக்கு வீட்டுமனை பட்டா...

`வெட்கம், திமுக-வுக்கும், தலைவருக்கும் இழுக்கல்லவா?'- துரைமுருகன் இல்ல திருமணம் குறித்து கி.வீரமணி

தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள நண்பர் துரைமுருகன் இல்லத்தில்...

`மாணவர்கள் தப்பு தப்பா முடிவெட்டிட்டு வந்தா மொட்டையடிச்சு விடுங்க..!' – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயன்ரெட்டியாபட்டி அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்களை மொட்டை...