29
October, 2026

A News 365Times Venture

29
Thursday
October, 2026

A News 365Times Venture

"இடைத்தேர்தலில் பல Modulation-இல் கத்த நடத்தப்படுகின்றன இந்த ரெய்டுகள்" – விஜய்யைச் சாடும் ஸ்டாலின்

Date:

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், “பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் – ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைத்திருப்ப Roadshow நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.

கே.என் நேரு

ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க. எனும் “TN Branch Washing Machine”, தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்!

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் – முதலமைச்சர் மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது!

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களைப் பாதித்துக் கொண்டிருக்கும் இந்த த.வெ.க. ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'கோணல் மூஞ்சி முதல்வர்; தூங்கு மூஞ்சி அரசு!' – மாமன்றத்தில் கொந்தளித்த திமுக கவுன்சிலர்!

சென்னை ரிப்பன் பில்டிங்கில் இந்த மாதத்திற்கான மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடந்து...

நகராட்சி நிர்வாகத் துறையில் மோசடி: KN நேரு வீட்டில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குச் சொந்தமான இடங்களில் இன்று (அக்டோபர்...

"இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லை, எல்லாம் ஒப்பந்தப் பணிகள்தானா?" – தவெக அரசிற்கு கனிமொழி கேள்வி

சமீபத்தில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிக்க...