16
October, 2026

A News 365Times Venture

16
Friday
October, 2026

A News 365Times Venture

“ஆம், ஆட்சி மாற்றம்தான் எங்கள் விருப்பம்" – பிரசாந்த் பூஷண் அதிரடி

Date:

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தின் உண்மையான நோக்கம் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் என பா.ஜ.க குற்றம்சாட்டி வருகிறது.

தேர்தல் முறைகேடுகள், எஸ்.ஐ.ஆர் விவகாரம் உள்ளிட்டவைகளை முன்வைத்து தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும், CJP அமைப்பும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், நேற்று மாலை அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தேசியத் தலைவர் நேஹா போரா, CJP அமைப்பின் அபிரீத் தீப்கே ஆகியோருடன், சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் செய்தியாளர்களைச் சந்திதனர்.

பிரசாந்த் பூஷண்

அப்போது பேசிய பிரசாந்த் பூஷண், “ஜனநாயக நாட்டில் ஒரு அரசுக்கு எதிராக அதிருப்தியைப் வெளிப்படுத்துவதும், தவறுகளுக்கு அரசை பொறுப்பேற்கச் சொல்வதும் குற்றமல்ல. எதிர்க்கட்சிகள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக பா.ஜ.க குற்றம் சாட்டுகிறது. நாங்கள் தற்போது தேர்தல்கள் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்யவே போராடி வருகிறோம். ஆனால், இந்த வகையான அடக்குமுறைகளும், கொடூரங்களும் தொடர்ந்தால், நிச்சயமாக இங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆமாம், நாங்கள் அனைவரும் ஆட்சி மாற்றத்தைத்தான் விரும்புகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது?

பா.ஜ.க முன்னதாகப் பல போராட்டங்களை ஆட்சி மாற்றத்திற்காக நடத்தவில்லையா? ஆனால் இப்போது ஆட்சி மாற்றத்திற்கான சதி நடப்பதாகக் கூறுகிறார்கள். சர்வாதிகார அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயகத்தைக் காக்க நடக்கும் இந்தப் போராட்டம், இப்போது ஆட்சி மாற்றத்திற்கான போராட்டமாக மாறியுள்ளது” என்று தெரிவித்தார்.

பிரசாந்த் பூஷனின் இந்த அறிவிப்புக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இன்று லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “ போராட்டக் குழுக்கள் நாட்டின் இளைஞர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி வன்முறை அரசியலில் ஈடுபட வைக்கின்றனர்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

பங்களாதேஷில் நிகழ்ந்ததைப் போல இந்தியாவிலும் ‘ஆட்சி மாற்றத்தை’ ஏற்படுத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்களின் ஒரே நோக்கம் அரசைக் கவிழ்ப்பதுதான் அவர்களின் நோக்கம். ஜனநாயகத்தைக் குழப்பத்திற்கோ, அரசியலமைப்பு நிறுவனங்களின் நம்பகத்தன்மையைக் குலைப்பதற்கோ அல்லது இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தைத் தடுப்பதற்கோ இளைஞர்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதை ராகுல் காந்தியும் அவரது தோழர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பெரியார் நூலகம்: 'Cheap CM-இன் Sticker ஆட்சியில்.!'- முதல்வரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

கோவையின் புதிய அடையாளமாக ரூ. 300 கோடியில் கட்டப்பட்டிருக்கும் பெரியார் அறிவு...

'டெல்லி காவல்துறை என்னை எந்த நேரத்திலும் கைது செய்யக்கூடும்,சிறை செல்லவும் நான்.!'- அபிஜித் தீப்கே

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி...

பெரியார் அறிவுலகம்: “யார் திறந்தால் என்ன! திறந்து வைப்பதா பெருமை?" – ஸ்டாலின்

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில்...

“மாநிலத்தில் போட்டி, தேசிய அளவில் கூட்டணி சாத்தியமே" – கார்த்தி சிதம்பரம் சொல்வது என்ன?

மாநில அளவில் அரசியல் கட்சிகளுக்கிடையே போட்டி நிலவினாலும், தேசிய அளவில் நாட்டின்...