28
May, 2026

A News 365Times Venture

28
Thursday
May, 2026

A News 365Times Venture

ஆதார் அப்டேட்டுகளை 'முற்றிலும் இலவசமாக' செய்துகொள்ளலாம்; இதற்கு UIDAI சொல்லும் சூப்பர் வழி!

Date:

இந்தியாவில் எங்கேயும், எப்போதும் கேட்கப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று – ஆதார் கார்டு.

அந்த ஆதார் கார்டை அப்-டு-டேட்டாக வைத்திருப்பது மிக மிக அவசியம்.

ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு மாறியிருப்போம். அப்போது முகவரி மாறியிருக்கும். அதை உடனடியாக ஆதாரில் அப்டேட் செய்து விட வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு மேல், ஆதார் கார்டில் தகவல்கள் அப்டேட் செய்யப்படவில்லை என்றாலும், அதை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும். காரணம், 10 ஆண்டுகளில் நமது முக அமைப்புகள் மாறியிருக்கும்.

ஆதார் கார்டு

எல்லா இடங்களிலும் கேட்கப்படும் ஆவணம் இது என்பதால், அது அப்டேட்டாக இருந்தால், பல குளறுபடிகளைத் தவிர்க்கலாம்.

இந்த அப்டேட்டுகளையும், ஏதேனும் ஒரு மாற்றத்தையும் ஆதார் கார்டில் செய்ய வேண்டுமென்றால், இ சேவை மையங்கள், தபால் அலுவலகங்களில் செய்தால், கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.

ஆனால், இவற்றில் சில மாற்றங்கள் ஆன்லைனில் முற்றிலும் இலவசம்.

அந்த ஆன்லைன் அப்டேட்டுகளை இலவசமாக செய்துக்கொள்ள முதலில் ஜூன் 15, 2026 வரை கெடு இருந்தது. ஆனால், இந்தக் கடைசி தேதி தற்போது ஜூன் 14, 2027 வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் இந்த இலவச வசதியைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வலைதளம் – ‘My Aadhaar‘.

இதில் Update Aadhaar எனும் டேப்-ஐ க்ளிக் செய்து தரவுகளை அப்டேட் செய்து கொள்ளலாம்.

இந்த வலைதளத்தில் ‘ஆவண அப்டேட்’டுகளை ஜூன் 14, 2027 வரைக்கும் இலவசமாக செய்துகொள்ளலாம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ரூ.2 கோடி; சாக்கு மூட்டையில் கட்டி மண்ணில் புதைத்து வைத்திருந்த திரிணாமுல் கட்சி நகராட்சி தலைவர்!

மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக...

'ராஜினாமா செய்கிறேன்' – அறிவித்த சித்தராமையா; இனி கர்நாடகா முதல்வர் 'டி.கே.சிவக்குமார்'!

2023-ம் ஆண்டு கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் போதே, இவருக்கு இரண்டரை...

“எல்‌.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து த.வெ.க-வில் இணைவது நாகரிகமான அரசியல் அல்ல!" – திருமாவளவன்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் ராணுவ பயிற்சி...

பெட்ரோல் முதல் உணவு வரை: `விண்ணைத் தொடும் விலை' – சோதிக்கப் போகும் 2026? – எச்சரிக்கும் நிதின் காமத்

பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் 'எல் நினோ (El Nino) விளைவால் நடப்பு...