23
March, 2026

A News 365Times Venture

23
Monday
March, 2026

A News 365Times Venture

ஆதவ் அர்ஜூனா பேசியது தொடர்பாக விஜய் பேசினாரா? – எடப்பாடி பழனிசாமி விளக்கம்

Date:

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி  கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பொதுக்குழுவில் அதிமுக குறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி

அதில், துரோக அதிமுக என்று குறிப்பிட்டுள்ளனர். துரோகம் செய்தது நாங்கள் கிடையாது. திமுக தான் நாட்டுக்கே துரோகம் செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் எல்லாம் நாட்டு மக்களுக்கு சிறப்பான திட்டங்களை வழங்கியிருக்கிறோம்.

திமுக மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. அனு தினமும் கொலை, கொள்ளை,  திருட்டு, வழிபறி, பாலியல் வன்கொடுமை என்று குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மோசமான ஆட்சி தான் ஸ்டாலின் மாடல் ஆட்சி.

திமுக
திமுக

இவர்கள் தான் துரோக ஆட்சி. திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. அதுவே அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது மற்றவர்கள் மீது பழி போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

மதுரையில் சாக்கடையைத் துணி வைத்து மூடி இருந்த காட்சியே மோசமான ஆட்சிக்கு சாட்சி. ஆதவ் அர்ஜூனா பிரச்னை குறித்து தவெக தலைவர் விஜய் என்னிடம் போனில் பேசவில்லை. அதுகுறித்து ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துவிட்டார். அந்த விவகாரம் முடிந்துவிட்டது.

விஜய்

மற்றபடி நடிகர் விஜய் என்னிடம் எதுவும் பேசவில்லை. தேமுதிக கட்சியுடன் சுமுகமான உறவு நீடிக்கிறது. அதில் ஏதாவது பேசி குழப்பம் ஏற்படுத்த வேண்டும் நினைக்க வேண்டாம். அது நடக்கவும் நடக்காது.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தஞ்சை: விஜய் வாகனத்தைப் பின்தொடர்ந்ததில் விபத்து: சிகிச்சையில் இருந்த கல்லுாரி மாணவர் பலி

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிப்பட்டியில், கடந்த 4ம் தேதி, தமிழக...

”வைத்திலிங்கம் நம்முடன் சேர்ந்திருக்கிறார்” – ஒரத்தநாடு தொகுதி நேர்காணலில் ஸ்டாலின் சொன்னது என்ன?

அதிமுகவில் சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஓபிஎஸ் அணியில் இருந்தார்....

எரியாத அடுப்புகள்- அனுபவக் கொடுமைகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது....

இறுதி வரை திக் திக்.! `புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி தொடர்கிறது’ – கூட்டாக அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற  இருக்கும் நிலையில்,...