27
November, 2026

A News 365Times Venture

27
Friday
November, 2026

A News 365Times Venture

அரசு மருத்துவமனை கழிவறையில் முதியவர் சடலம்; இறந்து 3 நாள்களுக்குப் பிறகு மீட்பு; நடந்தது என்ன?

Date:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாக்குட்டி ராவத்தர் (77). சுவாசக் கோளாறு காரணமாகக் கடந்த 16-ம் தேதி திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்குத் துணையாக உடன் யாரும் இல்லாமல் தனியாகச் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனை பொது மருத்துவப் பிரிவு வார்டில் சிகிச்சை பெற்று வந்த மாக்குட்டி ராவத்தரை, கடந்த 19-ம் தேதி இரவு 9 மணியளவில் காணவில்லை எனக் கூறப்பட்டது. மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவக் கல்லூரி போலீசாரும் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வார்டிலுள்ள கழிவறை ஒன்று உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. முதலில் சுத்தம் செய்யச் சென்ற ஊழியர்கள் கதவைத் தட்டிப்பார்த்துவிட்டு வந்துவிட்டனர். தொடர்ந்து பூட்டப்பட்டிருந்த அந்தக் கழிவறையால் சந்தேகமடைந்த ஊழியர்கள் 21-ம் தேதி கதவை உடைத்துப் பார்த்தபோது, உள்ளே மாக்குட்டி ராவத்தர் சடலமாகக் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது சட்டைப் பையிலிருந்த அடையாள அட்டையில் இருந்த முகவரியைக் கொண்டு உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

முதியவர் இறந்த மருத்துவமனை

“நோயாளி காணாமல் போன பிறகும் ஊழியர்கள் கழிவறையைச் சுத்தம் செய்தனர். 20-ம் தேதி கூட அவரை கழிவறை அருகே ஊழியர்கள் பார்த்துள்ளனர்” என மருத்துவமனை கண்காணிப்பாளர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் உயிரிழந்து 36 மணி நேரத்திற்கு மேலாகிவிட்டதாகவும், மாரடைப்பு காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், 19-ம் தேதி இரவே அவர் கழிவறைக்குள் மாரடைப்பால் உயிரிழந்ததும், மூன்று நாள்களாக கழிவறை சுத்தம் செய்யப்படாமலும், கவனிக்கப்படாமலும் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்து சி.பி.எம் கட்சியினர் மற்றும் டி.ஒய்.எஃப்.ஐ உள்ளிட்ட அமைப்பினர் மருத்துவமனை நோக்கி கண்டனப் பேரணி நடத்தினர். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி மருத்துவமனைக்கு நேரில் சென்று, கண்காணிப்பாளரிடம் இந்தச் சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார்.

இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் லிஜோ ஜே. கொல்லன்னூர் கூறுகையில், “கடந்த 19-ம் தேதி நோயாளியைக் காணவில்லை என்றதும் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துவிட்டோம். 19, 20 ஆகிய தேதிகளில் கழிவறை சுத்தம் செய்யப்பட்டது. 20-ம் தேதி இரவோ அல்லது 21-ம் தேதி அதிகாலையிலோ அவர் உயிரிழந்திருக்கலாம். 21-ம் தேதி காலை ஊழியர்கள் கதவைத் தட்டியும் திறக்காததாலேயே உடைத்துப் பார்த்தோம். மாநில சுகாதாரத் துறையைச் சீர்குலைக்கும் நோக்கில் திட்டமிட்டு தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சூடுபிடிக்கும் தொகுதி மறுவரையறை; பாஜக கணக்கும் காங்கிரஸின் கூட்டணி சிக்கலும்; திமுகவின் முடிவு என்ன?

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டம்நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 30ம் தேதி முதல்...

சிவகங்கை: 'ஆப்சென்ட்' ஆன தவெக MLA-க்கள்; கையெழுத்திட்ட உதவியாளர்கள்; கொதித்த கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்...

இடைத்தேர்தல்: "2 தொகுதிகளில் நடத்தலாம்; 3 தொகுதிகளுக்கு வழக்கு முடியட்டும்" – உயர் நீதிமன்றம்

திருச்சி கிழக்கு உள்பட 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.இந்த...

CJP: வெளிநாடு செல்வதைத் தடுக்க காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ்

காக்ரோச் ஜனதா கட்சியினர் கடந்த மாதம் டெல்லி மற்றும் மும்பையில் தலைமைத்...