31
August, 2026

A News 365Times Venture

31
Monday
August, 2026

A News 365Times Venture

'அரசியலை கற்பனையாக உருவாக்க வேண்டாம்'- எதிர்க்கட்சி வரிசையில் தாரகை; மாணிக்கம் தாகூர் விளக்கம்

Date:

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரான தாரகை கத்பர்ட், ஆளுங்கட்சி வரிசையிலிருந்து திடீரென எதிர்க்கட்சிகளுக்கான முதலாவது வரிசைக்கு இடம் மாறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” சட்டமன்றத்தில் இருக்கை மாற்றம் என்பது வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதிதான்.

சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதன் காரணமாக, இருக்கை மாற்றப்பட்டுள்ளது.

தாரகை கத்பர்ட்

மேலும், கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் அமர்வை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சியின் இரண்டு மாண்புமிகு அமைச்சர்களும் முதல் வரிசையில் அமர்ந்துள்ளனர்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் இந்த மாற்றத்தை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு வழக்கமான இருக்கை மாற்றத்தை வைத்து, இல்லாத அரசியல் அர்த்தங்களை கற்பனை செய்து பரப்ப வேண்டாம்.

செய்தியை செய்தியாகவே பாருங்கள். அரசியலை கற்பனையாக உருவாக்க வேண்டாம்!” என்று பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு:“அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டது"- அரசு பதில்

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த...

பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் ரொக்கப் பணம் பற்றி தெரிவிக்க வேண்டும்! கலெக்டர் உத்தரவின் காரணம் என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள அலுவலர்கள் மற்றும்...

`தீபாவளி, பொங்கல் நாள்களில் ஒருநாளாவது லீவ் கொடுங்க' – டாஸ்மாக் ஊழியர்களுக்காக பேசிய சௌமியா அன்புமணி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மகளிர், மதுவிலக்கு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் வேளாண்மைத் துறை மானியக்...

காமராஜர் விருப்பம் டு எம்.ஜி.ஆர் முயற்சி: காகிதத்தில் தூங்கும் ராசிமணல் அணைத் திட்டம்! | ஓர் அலசல்

இந்த உலகம் 71% நீராலும் 29% நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. ஆனால் உலகம்...