16
April, 2026

A News 365Times Venture

16
Thursday
April, 2026

A News 365Times Venture

`அரசாங்கத்திற்கு ஆயுதம் தயாரிக்க உதவி செய்யுங்கள்!' – General Motors, Ford-ஐ கேட்கும் ட்ரம்ப் & கோ

Date:

ரஷ்யா – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவி… ஈரான் மீது தாக்குதல் ஆகிய காரணங்களால் அமெரிக்காவின் ஆயுத இருப்பு குறைந்துள்ளது.

இதைச் சரிசெய்ய ஜெனரல் மோட்டர்ஸ், ஃபோர்ட் உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்களிடம் பேசியுள்ளது, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அரசாங்கம்.

அதாவது இந்த நிறுவனங்கள் வாகன உற்பத்தியைத் தாண்டி, தங்களது உற்பத்திச் சாலைகளில் அமெரிக்காவின் ஆயுதங்கள் உற்பத்திக்கு உதவி செய்ய முடியுமா என்கிற ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இந்தத் தகவலை அமெரிக்காவின் செய்தி நிறுவனமான ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வெளியிட்டுள்ளது.

ட்ரம்ப்

ஏன் இந்த யோசனை?

ஒருவேளை போர் சூழல் நீடித்தால், இனி புதிதாக ஒரு போர் தொடங்கினால், அதற்கு அமெரிக்காவிற்கு நிறைய ஆயுதங்கள் தேவைப்படும். இதைச் சமாளிக்கவே அமெரிக்காவிற்கு இந்த யோசனை.

இந்தப் பேச்சுவார்த்தை ஈரான் போருக்கு முன்னரே தொடங்கிவிட்டதாம். ஆனால், ஈரான் போர் தற்போதும் நீடித்து வருவதால், இந்தப் பேச்சுவார்த்தை இப்போது அவசரக்கட்டத்தை எட்டியுள்ளது.

அமெரிக்காவின் புதிய யோசனை படி, வாகன நிறுவனங்கள் முழுமையான ஆயுதங்களைத் தயாரிக்காது. வழக்கமான, ஆயுத உற்பத்தியாளர்களுக்கு உதவி செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தை சில விமான நிறுவனங்களுடனும் நடக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`உங்கள் கட்சியில் அனைத்து சீட்டுகளையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்களேன்..!' – அமித் ஷா Vs அகிலேஷ்

நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அரசியல் மையங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கும்...

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்; தொகுதி மறுவரையறைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (ஏப்ரல். 16) கூடியிருக்கிறது. தொகுதி மறுவரையறை...

'இனி ரஷ்யா, ஈரான் எண்ணெய் வாங்கக் கூடாது' – Expiry ஆகும் அமெரிக்காவின் 'அனுமதி'

ஈரான் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் காரணமாக, அமெரிக்கா தற்காலிகமாக ரஷ்ய...

'தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்' – தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் போராட்டம்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் போராட்டம் ஒன்றை...