20
August, 2026

A News 365Times Venture

20
Thursday
August, 2026

A News 365Times Venture

"அம்மா, உங்களையும் அப்பாவையும் ஒன்றாக பார்த்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.!"- ராகுல் உருக்கம்

Date:

இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கைப் பயணத்தை விவரித்து உருவாகியுள்ள சுயசரிதைப் புத்தகம் ‘Belonging: A Journey of Love’.

இந்தப் புத்தகம் நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் புத்தகம் தொடர்பாகவும், தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டும் ராகுல் காந்தி உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

ராகுல் காந்தி குடும்பம்

அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், ” அம்மா, உங்களையும் அப்பாவையும் ஒன்றாக நான் கடைசியாகப் பார்த்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

அப்பா விட்டுச் சென்ற நாளிலிருந்து, அத்தனை சவால்களையும் நீங்கள் ஒருபோதும் தளராத துணிச்சலுடனும் கண்ணியத்துடனும் எதிர்கொண்டதை நான் பார்த்திருக்கிறேன்.

நீங்கள் என்னென்ன துயரங்களைச் சந்தித்தீர்கள் என்பதையும், அப்பாவுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையும் உண்மையாக அறிந்தவர்கள் பிரியங்காவும் நானும் மட்டுமே.

‘Belonging: A Journey of Love உங்கள் சுயசரிதை, உங்களை நேசிக்கும் கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட உள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இன்று, அப்பாவின் பிறந்தநாள், அவர் புன்னகையுடன் தனது அழகான சோனியாவைப் பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது” என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"நாங்கள் மேக்கேதாட்டுவில் அணைக் கட்டுவதே தமிழகத்திற்காக தான்" – கர்நாடகா முதல்வரின் 'ட்விஸ்ட்' பதில்

கர்நாடகா முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றதும் அவர் மிகவும் வேகம் காட்டிய ஒன்று...

"சட்டமன்றத்தில் முதல் பேச்சை கன்னிப் பேச்சு என்று குறிப்பிடாதீர்கள்" – வானதி சீனிவாசனின் விளக்கம்

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் முதன்முதலாகப் பேசப்படும் பேச்சை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுவார்கள்.ஆனால்,...

"அமெரிக்காவின் கடன் நெருக்கடியை திசை திருப்பவே எங்கள் மீது பொருளாதார D-Day" – ஈரானின் ரியாக்‌ஷன்

ஈரானுக்குப் பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுக்க நேற்று (ஆகஸ்ட் 19), ஈரானுக்கு...

Delimitation: "தமிழ்நாட்டின் ’எட்டப்பர்கள்’ என ராகுல் கூறியது இவரைத்தானா?"- விஜய்யை சாடிய திமுக

சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை நடவடிகைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர்...