23
November, 2026

A News 365Times Venture

23
Monday
November, 2026

A News 365Times Venture

அமெரிக்க பங்குச்சந்தை சரிவு, ஈரான் தாக்குதல்: ஜனநாயகக் கட்சி மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

Date:

மிட் டேர்ம் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…

“நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற இடைக்காலத் தேர்தல்கள் குறித்து நான் கணித்த இரண்டு விஷயங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும்.

முதலாவதாக, ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்றால் பங்குச் சந்தைகள் கடுமையாகச் சரியும் என்று கூறினேன்; அது இப்போது நடந்துள்ளது.

ட்ரம்ப் பதிவு

இரண்டாவதாக, இதுவரை 81,000 போராட்டக்காரர்களைக் கொன்றுள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசு, தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் என்று கூறினேன்; அதுவும் இப்போது நடந்துள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவிற்கு, கடந்த வாரத்தில் ஈரான் அதிக அளவிலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியுள்ளது.

கவலைப்பட வேண்டாம், அவை அனைத்தும் இடைமறித்து வீழ்த்தப்பட்டுவிட்டன; எந்தச் சேதமும் ஏற்படவில்லை.

ஜனநாயகக் கட்சியினரும் ஈரானும் இணைந்து…

ஈரானியத் தலைவர்கள் ஜனநாயகக் கட்சியினரைப் பலவீனமானவர்களாகவும், திறமையற்றவர்களாகவும், நாட்டைச் சீரழிப்பவர்களாகவும் கருதுகிறார்கள்.

ஆனால் அப்படி எதுவும் நடக்க நான் விடமாட்டேன்!

ஜனநாயகக் கட்சியினரும் ஈரானும் இணைந்து, எண்ணெய் விலையை முடிந்தவரை உயர்த்திப் பிடிக்கக் கடுமையாகப் போராடினார்கள். ஆனால், தேர்தலுக்குப் பிறகு எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்குக் குறைந்துள்ளது.

வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன்பே இதைப் புரிந்துகொள்ளாமல் போனது வருத்தமளிக்கிறது; ஆனால் இந்த ஒட்டுமொத்தத் தேர்தலுமே மிகவும் ‘விசித்திரமாக’ இருந்தது. இறுதியில், அமெரிக்காவே வெல்லும்!”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஜீவனாம்சம் எப்போது கேட்கலாம்? கணவரும் ஜீவனாம்சம் கேட்கலாமா? | சட்டம் சொல்வது என்ன? – 19

“கணவரைப் பிரிந்து வாழ்கிறேன். வருமானமும் இல்லை. விவாகரத்து வழக்குத் தொடர்ந்தால்தான் ஜீவனாம்சம்...

'ஆபத்தை சமாளிக்க…' – ஆதரவுக் கட்சி எம்.எல்.ஏக்களை சந்திக்கும் முதல்வர் விஜய்! – காரணம் என்ன?

தவெக ஆட்சிக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை முதல்வர் விஜய் தன்னுடைய...

'மாவட்டச் செயலாளரா… வி.எஸ் பாபுவின் மகனா?' – கொளத்தூரில் யாரை நிறுத்தப் போகிறார் விஜய்?

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமாகி சில நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், இடைத்தேர்தலுக்கு...

நெல்லை: படகு சவாரியுடன் புதுப்பொலிவு பெறும் டவுன் நயினார் குளம்; துவக்கி வைத்த அமைச்சர் | Photos

நெல்லை: படிக்கட்டில் இறந்து கிடந்த சிசு; கர்ப்பத்தை மறைத்து இளம்பெண்ணுக்கு திருமணம்...