18
July, 2026

A News 365Times Venture

18
Saturday
July, 2026

A News 365Times Venture

“அமெரிக்கா தேர்தலில் சீனா தலையிட்டிருக்கிறது" – ரகசிய ஆவணத்தை வெளியிட்ட அதிபர் ட்ரம்ப்

Date:

அமெரிக்கத் தேர்தல் பாதுகாப்பு விவகாரங்களில் சீனாவின் தலையீடு இருப்பதாகக் கூறி, அதிபர் ட்ரம்ப் சில உளவுத்துறை ஆவணங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் சீனா எந்தவொரு முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்த நிலையிலும், ட்ரம்ப் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இந்த ரகசிய ஆவணம் குறித்து அதிபர் ட்ரம்ப் ஆற்றிய 25 நிமிட உரையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

சீனா Vs அமெரிக்கா

அவரின் உரையில், “வாக்காளர் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் பெயர்கள், முகவரிகள் உள்ளிட்ட 22 கோடி அமெரிக்க வாக்காளர்களின் ரகசியக் கோப்புகளைச் சீனா சட்டவிரோதமாகப் பெற்றுள்ளது என்பதை இந்த ஆவணங்கள் நிரூபிக்கிறது. மேலும், சீனாவின் இந்தச் செயல்பாடுகளின் தீவிரத்தை அமெரிக்க உளவுத்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் திட்டமிட்டு மறைத்துவிட்டனர். எனவே, அமெரிக்கத் தேர்தல்களில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடியுரிமைச் சான்றுகளைக் கட்டாயமாக்கும் புதிய சட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், அதிபர் ட்ரம்பின் குற்றச்சாட்டுகள் 2021-ம் ஆண்டு அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ மதிப்பீட்டிற்கு முரணாக அமைந்துள்ளன. தற்போதைய சிஐஏ இயக்குநரும், அன்றைய உளவுத்துறை இயக்குநருமான ஜான் ராட்க்ளிஃப் தலைமையில் நடந்த ஆய்வு முடிவில், `2020 அதிபர் தேர்தலில் வாக்காளர் பதிவு, வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகள் என எந்தவொரு தொழில்நுட்ப அம்சத்தையும் வெளிநாட்டுச் சக்திகள் மாற்றியமைக்கவில்லை.’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியு சாங் கூறுகையில், “அமெரிக்க அதிபர் தேர்தல்களில் சீனா ஒருபோதும் தலையிட்டதில்லை, இனியும் தலையிடாது” என்று மறுப்புத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஜனநாயகக் கட்சியின் மூத்த செனட்டர் மார்க் வார்னர், “ட்ரம்பின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் போலியானவை; 2020 தேர்தலில் சீனா ஒரு வாக்கைக்கூட மாற்ற முயற்சிக்கவில்லை என்பதில் உளவு அமைப்புகள் ஒருமனதாக உள்ளன” எனச் சாடியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"ரெண்டு சீட் வெச்சிக்கிட்டு இவ்ளோ ஆட்டமானு கேட்குறாங்க, ஆனா..!” – விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...

'நித்யானந்தாவின் கைலாசாவோடு தவெக அரசு ராஜாங்கரீதியான உறவா?' – விவரம் என்ன?

நிநித்யானந்தாவின் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் தவெக அரசின் அமைச்சர்களை...

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி...

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள்...