21
October, 2026

A News 365Times Venture

21
Wednesday
October, 2026

A News 365Times Venture

"அமெரிக்கா 'இதை' செய்யும் வரை; ஒரு கிராம் யுரேனியத்தைக்கூட வெளியேற்றமாட்டோம்" – ஈரான் நிபந்தனை

Date:

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடக்கவுள்ள மிட் டேர்ம் தேர்தலை முன்னிட்டு, ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தம், நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைக் களமாக அமையும் என்று எதிர்பார்த்தால், அது நடக்காது போலும்.

ஈரானும் அமெரிக்காவும் மாறி மாறித் தொடர்ந்து குற்றம்சாட்டிக்கொண்டே இருக்கின்றன.

அணு ஆயுதம் இருக்கிறதா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் போர் தொடங்கியதே ஈரான் அணுசக்தி பெற்றிடக் கூடாது என்பதற்காகத்தான் என்று வலுவாகத் திரும்பத் திரும்பக் கூறுகிறார்.

ஈரான் பதிவு

ஆனால், ஈரானோ, “நாங்கள் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை. நாங்கள் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை மட்டும்தான் வைத்திருக்கிறோம்.

சர்வதேச அணுசக்தி முகமை நாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கிறோமா என்பதை நேரில் வந்து ஆய்வு செய்துகொள்ளலாம்.

ஆனால், அதற்கு முன், இஸ்ரேலிடம் அணு ஆயுதம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்” என்று கூறுகிறது.

ஒரு கிராம் யுரேனியத்தைக் கூட…

இப்போது ஈரானும் அமெரிக்காவும் இன்னும் சமாதானத்தை எட்டாத நிலையில், ஈரானின் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாய், “அமெரிக்கா நம்பிக்கைக்கான நடவடிக்கைகளை எடுக்கும் வரை, செறிவூட்டப்பட்ட யூரேனியத்தில் ஒரு கிராமைக்கூட ஈரானை விட்டு வெளியேற்றமாட்டோம். பேச்சுவார்த்தையும் நடத்த மாட்டோம்.

அமெரிக்காவின் நம்பிக்கைக்கான நடவடிக்கை ஈரானுடைய நிபந்தனைகளை நிறைவேற்றுவதிலிருந்து தொடங்க வேண்டும்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உங்களுக்கு லீகல் நோட்டீஸ் வந்திருக்கா? பயப்பட வேண்டாம்! – சட்டம் சொல்வது என்ன? – 4

''உங்களுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியிருக்கோம்!”இந்த ஒரு வார்த்தையைக் கேட்டாலே, “அய்யய்யோ… நம்ம...

"நான் என்ன மெத்தபெட்டமைன் விற்றேனா?" – சிறையில் அடைக்கப்பட்ட நாம் தமிழர் கார்த்திகா ஆவேசம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி...

“Virtual warriors எனச் சொல்லிக்கொண்டு, Virtual abusersகளை உருவாக்குவதா?” – மேயர் பிரியா கேள்வி

சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதாகக் கூறி, சென்னை கமிஷனரிடமும்,...