16
July, 2026

A News 365Times Venture

16
Thursday
July, 2026

A News 365Times Venture

"அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை; வன்னிய மக்களை வைத்து..!"- பாமக முன்னாள் எம்எல்ஏ அருள்

Date:

“பாமகவினர் அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை. வன்னிய மக்களை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அன்புமணியை புறக்கணிக்க வேண்டும்”- என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் பேசியிருக்கிறார்.

சேலத்தில் தனது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அன்புமணி ராமதாஸ்

“எப்போதும் எனக்கு ராமதாஸ்தான் கடவுள். நேற்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் ராமதாஸ்தான் எனக்கு கடவுள். 6 முறை வாய்ப்பு தந்து 7ஆம் முறை எம்எல்ஏ ஆக்கியவர் ராமதாஸ்.

எத்தனையோ சோதனையான சூழலில் உயிரை பணயம் வைத்து அன்புமணியை காப்பாற்றினேன். அன்புமணியை கண்டு வன்னியர்கள் ஏமாறக்கூடாது. வன்னிய மக்களை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அன்புமணியை புறக்கணிக்க வேண்டும்.

ராமதாஸை ஏற்ற பாமகவினர் அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை. நிறுவனர் ராமதாஸ் உடன் நான் இருந்ததால் அன்புமணி என்னை துரோகி, சாக்கடை என்று கூறினார். எத்தனையோ சோதனையான சூழலில் உயிரை பணையம் வைத்து அன்புமணியை காப்பாற்றினேன்.

அன்பு மணி- எம்எல்ஏ அருள்
அன்பு மணி- எம்எல்ஏ அருள்

திமுக, அதிமுக, தவெக, தமிழக வாழ்வுரிமை கட்சி என அனைத்து கட்சிகளில் இருந்தும் எங்களுக்கு அழைப்பு வந்த வண்ணம் உள்ளது. ஒரு மாதத்திற்கு பின் ஆடி மாதம் முடிந்ததும் எந்த முடிவாக இருந்தாலும் தெரிவிப்போம். பாமகவில் அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இனி எந்த பாதை என்பதை ஆலோசித்து முடிவெடுப்பேன்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பழநி : "முன்னாள் அமைச்சர் மூர்த்தி மினிஸ்டர் கட்டிங் என பணம் வாங்கினார்.!"- நிர்மல் குமார் பகீர்

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (ஜூலை.16) நடைபெற்றது....

'40 நிமிட அமைச்சரவை கூட்டம்; கடுமையாக எச்சரித்த முதல்வர் விஜய்!' – ஜெர்க் ஆன அமைச்சர்கள்!

தமிழக முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த...

"உங்கள் பிரதமரின் வயது என்ன? நான் எப்போதாவது கேட்டேனா?" – மம்தா பானர்ஜி தாக்கு

15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்...

’கோவை தவெக-வில் உட்கட்சிப் பூசலா?’ – சூலூர் எம்.எல்.ஏ சுகுமார் விளக்கம்!

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற  உறுப்பினர் சுகுமார் நேற்றிரவு கணியூர் பகுதியில்,...