6
June, 2026

A News 365Times Venture

6
Saturday
June, 2026

A News 365Times Venture

'அண்ணாமலை விலகியது பாஜகவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா?' – நயினார் நாகேந்திரனின் பதில் என்ன?

Date:

அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

பின்னாளில் அது கட்சியாக உருவெடுக்கும் என்றும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அண்ணாமலை

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரனிடம் பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியது கட்சிக்கு இழப்பா? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதில் அளித்த அவர், “பாஜக இன்று நேற்று அமைத்த கட்சி அல்ல. இது சிந்தாந்தம் அடிப்படையிலான கட்சி. நிச்சயமாக அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

ஓர் இயக்கம் அல்லது கட்சியை யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். பிரதமர் மோடி எந்த நாட்டுக்கு, எந்த ஊருக்குச் சென்றாலும் தமிழ், தமிழ் மக்கள் மற்றும் தமிழ் மொழியைப் பற்றி பேசி வருகிறார். அண்மையில் நமது செப்பேடுகளைக் கூட மீட்டு வந்திருக்கிறார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

தமிழகத்துக்கு எல்லா நிதிகளையும் கொடுக்கிறது. சாலைகளும் போடப்படுகிறது. ரேஷன் பொருட்களையும் மத்திய அரசுதான் கொடுக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"நமது அரசியல் இயக்கம் தொடக்கம்; கட்சியாக அடுத்தப் பொதுத்தேர்தலில் போட்டியிடுவோம்!" – அண்ணாமலை அதிரடி

தமிழக பாஜக முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும் இடையே ஏற்பட்ட...

ரூ.634 கோடி லஞ்ச விவகாரம்: `கே.என் நேரு மீது ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு' – ஹைகோர்ட்டில் தமிழக அரசு

முந்தைய திமுக ஆட்சி காலத்தில், நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு...

முன்பு வேண்டாம் என்று மறுத்த `இந்தியா' ; மீண்டும் கதவைத் தட்டும் `ரஷ்யா!' Su-57 டீல் ஓகே ஆகுமா?

ஐந்தாம் தலைமுறை போர் விமானமான சுகோய் Su-57-ஐ இந்தியாவோடு இணைந்து தயாரிக்கத்...

கோவை பாஜக முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா – அண்ணாமலை அமைப்பில் ஐக்கியம்

பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், முன்னாள்...