14
August, 2026

A News 365Times Venture

14
Friday
August, 2026

A News 365Times Venture

‘ஹார்முஸ் எங்கள் கட்டுப்பாட்டில்’ ட்ரம்ப் சொல்கிறார்; இருந்தும், அங்கே போக்குவரத்தில் சிக்கல்!

Date:

ஈரான் போரில் எத்தனை முறை மீண்டும் மீண்டும் தாக்குதல் தொடங்கினாலும், அதன் வழி வந்து முடிவதும், மையமாக மாறுவதும் ஹார்முஸ் நீர்ச்சந்தி தான்.

ஈரானும், அமெரிக்காவும் போர்களத்தில் மோதிக்கொள்வதை விட, ஹார்முஸ் நீர்ச்சந்தி விஷயத்தில் மோதிக்கொள்வதுதான் அதிகமாக உள்ளது.

‘பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது’ என்று அமெரிக்காவும், ‘செய்தி பரிமாற்றம் நடக்கிறது’ என்று ஈரானும் இந்தப் போர் குறித்த பேச்சுவார்த்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

ஹார்முஸ் நீர்ச்சந்தி

சில நாள்களாக, ஈரான் போர் மிகவும் தீவிரமடையாததால் கச்சா எண்ணெயின் விலை படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால், இப்போதும் மீண்டும் ஹார்முஸ் நீர்ச்சந்தி குறித்த பேச்சுகள் தீவிரமடைய கச்சா எண்ணெயின் விலை உயர்கிறது.

போரினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் இழப்பீடு வாங்க பிளான் செய்கிறது ஈரான்.

இந்த நேரத்தில் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசும் போது, “எனக்கு ஈரான் மீது நம்பிக்கையே இல்லை. ஈரானை நம்பக்கூடிய கடைசி ஆள் நானாகத்தான் இருப்பேன். அவர்கள் தொடர்ந்து என்னிடம் பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஹார்முஸ் நீர்ச்சந்தி இப்போது முழுமையாக எங்களது கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அவர்களிடம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எங்களிடம் தான் முழு அதிகாரமும் இருக்கிறது. அது எங்களுடையது.

ஒருவேளை ஏதேனும் ஒரு கட்டத்தில் அவர்கள் ஏதேனும் செய்ய முயன்றால், அப்புறம் அவ்வளவுதான்… அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள்.

ஆனால் இப்போது நாங்கள் மிகவும் வலுவான ஒரு நிலையில் இருக்கிறோம். கடந்த 50 ஆண்டுகளாக மத்திய கிழக்கையே மிரட்டி வந்த ஒரு நாடு இது” என்று கூறியிருக்கிறார்.

ஹார்முஸ் நீர்ச்சந்தி
ஹார்முஸ் நீர்ச்சந்தி

ஹார்முஸ் நீர்ச்சந்தியில் தற்போது போக்குவரத்து நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால், அது குறைந்த அளவிலான… கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து மட்டுமே.

ஈரான் கையில் ஹார்முஸ் நீர்ச்சந்தி இருந்தால் தான், அங்கே போக்குவரத்து கடினமாகிறது. ஆனால், ட்ரம்ப் சொல்வது போல, ஹார்முஸ் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால், ஏன் இன்னும் போக்குவரத்து எளிதாகவில்லை?

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பாஜகவிலிருந்து தன்னுடன் வெளியேறியவர்களுக்கு முக்கியத்துவம்; வேகமெடுக்கும் அண்ணாமலை-ன் We The Leaders

அண்ணாமலை தொடங்கியுள்ள We The Leaders அமைப்பில் அடுத்தகட்டமாக மாநில மற்றும்...

`திருமணம் ஆகாதவர்கள் குடித்தால் ரூ.5,000 அபராதம்!' – மீனவ கிராமத்தின் `மது ஒழிப்பு' முன்னெடுப்பு

மது பழக்கத்தால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பொது அமைதியைப் காக்கும்...

'அமெரிக்காவை Scam செய்கிறது இந்தியா' – வெள்ளை மாளிகை குற்றச்சாட்டு; செக் வைக்க ட்ரம்பின் புது ரூட்!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து உலக நாடுகள் சந்தித்து வரும்...

“அவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது..!" – மா.சுப்ரமணியனை தோற்கடித்த வாக்காளர்களை சாடிய ஆர்.எஸ் பாரதி

சென்னை காரம்பாக்கத்தில் நடைபெற்ற கருணாநிதி நினைவுநாள் புகழ் வணக்க பொதுக்கூட்டத்தில் திமுக...