3
October, 2026

A News 365Times Venture

3
Saturday
October, 2026

A News 365Times Venture

ஸ்டாலின் : “உருவகேலி கூடாது என்ற தலைவரே இப்படி பேசி இருப்பது.!” – கொதிக்கும் தமிழக அமைச்சர்கள்

Date:

வருகிற 6-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்காக, நேற்று தாராபுரத்தில் பிரசாரம் செய்தார் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின்.

அப்போது அந்தத் தொகுதியின் தவெக வேட்பாளரான சத்யபாமாவை உருவகேலி செய்வதுபோலப் பேசியிருந்தார்.

ஸ்டாலினின் இந்தப் பேச்சிற்குப் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்துள்ளன. அந்த எதிர்ப்புகளின் தொகுப்பு…

தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா

“தமிழக அரசியல் களத்தில் திமுகவின் பேச்சுகள் மீண்டும் ஒரு தாழ்ந்த நிலையை எட்டியுள்ளன. அவருடைய ஆட்சி காலத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றபோது, பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் கூட சந்திக்காமல் ரீல்ஸ் எடுப்பதில் மும்முரமாக இருந்த ஒருவரிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?…”

சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்

“தாராபுரம் தனித் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளரான அன்புச் சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களை…

இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உருவ கேலி செய்யும் வகையில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையும், குறிப்பாக பட்டியல் இன சமுதாயத்தையும் அவமதித்துள்ளார்.

அரசியல் மாண்புகளுக்கு முற்றிலும் எதிரான இந்த தனிப்பட்ட தாக்குதலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!”

சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு

“உருவக்கேலி கூடாது என்று வழிகாட்டக்கூடிய தலைவரான அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே இப்படி பேசி இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

ஆணாதிக்கம் மிகுந்த சமூக கட்டமைப்பில் பெண்கள் பொது வாழ்க்கைக்கு வருவதே அரிது. அதுவும் தலித் பெண்கள் வருவது அதனினும் அரிது.

அதை முடக்கும் வகையில், ஆணாதிக்க சமூகம் தமது அதிகாரத்தை பயன்படுத்துவதை பார்க்கிறோம்…”

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்

“தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திருமதி. சத்யபாமா அவர்கள், ஏற்கனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்.

தனது அரசியல் நிலைப்பாட்டை மக்களிடம் நேரடியாக எடுத்துச் சொல்லும் வகையில், தனது பதவியை ராஜினாமா செய்து மீண்டும் ஜனநாயக முறையில், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மக்களின் தீர்ப்பை நாடி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றார்…

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அரசியல்வாதி என்பதற்காக, அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல. அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் ஒரு பெண்ணின் சமூகப் பின்னணியையும், உருவ கேலியும், பெண்ணினத்தையும், அவரது அரசியல் முடிவையும் இழிவுபடுத்தும் வகையிலான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், திருமதி சத்யபாமா அவர்கள் தொடர்பாக தெரிவித்த அருவருக்கத்தக்க கருத்துகளுக்கு விளக்கம் அளித்து, உடனடியாக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும். ஜனநாயகத்தில் இறுதி தீர்ப்பு மக்களுடையதே!


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`ஹெராயின், மெத்தம்பெட்டமைன் கடத்திய கடத்தல் மன்னன் இந்தியாவுக்கு நாடு கடத்தல்' – அமித் ஷா பெருமிதம்

துருக்கியில் தலைமறைவாக இருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் நவ்பிரீத் சிங்கை கைது செய்துள்ளதாக...

’அடுத்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக ஒன்றாக தேர்தலை சந்திப்பார்கள்’ – அமைச்சர் நிர்மல்குமார் ஆரூடம்

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது...

’ஸ்டாலினின் அருவருப்பான பேச்சை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்’ –அமைச்சர் சம்பத்குமார்

தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், த.வெ.க....

"ஐயப்பப் பக்தர்களின் உணர்வுகளை மதித்து, விருப்பங்களை நிறைவேற்றுவோம்" – கேரள தேவஸ்வம் அமைச்சர் உறுதி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் அகில பாரத ஐயப்பா...