22
September, 2026

A News 365Times Venture

22
Tuesday
September, 2026

A News 365Times Venture

வெயிலில் மயங்கிய அதிமுக வேட்பாளர்; மருத்துவமனையில் நலம் விசாரித்த திமுக வேட்பாளர் கோவி.செழியன்

Date:

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று திருவிடைமருதுார் தனி தொகுதி. இங்கு தி.மு.க சார்பில், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ இளமதி சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யபாரதி, த.வெ.க சார்பில் பிரபாகரன் உள்ளிட்டோர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். அனைத்து வேட்பாளர்களும் தொகுதிக்குள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக வேட்பாளரை நலம் விசாரித்த கோவி.செழியன்

அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன், ஆடுதுறை பேரூராட்சியில் தொடங்கி கோவிந்தபுரம், வண்ணக்குடி உட்பட 12 கிராமங்களில் வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வெயில் கடுமையாக அடித்ததால் வெப்பம் அதிகமாக இருந்தது. போகப் போக வெயில் அதிகமானதால் வண்ணக்குடியில், பிரசாரம் செய்துகொண்டு இருந்த இளமதி சுப்பிரமணியன் வெயில் தாங்க முடியாமல் திடீரென மயங்கினார். அங்கிருந்த நிர்வாகிகள் அவரை, ஆடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த டாக்டர், வெயில் தாக்கத்தால் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது என்றதுடன் அதற்கேற்ப சிகிச்சை அளித்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் திமுக வேட்பாளர் கோவி.செழியன் மற்றும் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி சுதா, முன்னாள் திமுக எம்.பி ராமலிஙகம் உள்ளிட்டோர் பிரசாரம் செய்து கொண்டு இருந்தனர். கோவி.செழியனுக்கு, இளமதி சுப்பிரமணியன் மருத்துவமனையில் அட்மிட் ஆன தகவல் தெரிய வர உடனே வாக்கு சேகரிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, அனைவருடனும் மருத்துவமனைக்குச் சென்று அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியனிடம் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.

மயங்கிய அதிமுக வேட்பாளர்

அப்போது, கோவி.செழியனுக்கு வணக்கம் வைத்து நன்றியை வெளிப்படுத்தினார் இளமதி. இந்த சம்பவம் திருவிடைமருதூர் தொகுதியில் பேசு பொருள் ஆனது. பிரசாரங்களில் இரு கட்சியினரும் கடுமையாக விமர்சித்து கொள்கின்றனர். அரசியல் ரீதியாக எதிர் எதிராக இருந்தாலும் அதை பார்க்காமல் ஓடிச் சென்று வகம் விசாரித்த கோவி.செழியனின் அரசியல் மாண்பை பலரும் பாராட்டினர். இது குறித்து இளமதி சுப்பிரமணியன் கூறியதாவது, “எனக்கு சாதாரண தலைச்சுற்றல் தான். சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டேன். என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"இதற்கு அந்த ஜோசியரையே முதலமைச்சராக்கி இருக்கலாம்" – விஜய்யைச் சாடிய சீமான்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம்...

"டீசல் தொழிற்சாலைகளை ரஷ்யா இழந்துவிட்டது; இது அவமானம்" – உக்ரைன் போர் குறித்து ட்ரம்ப்

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கிறது அமெரிக்கா.இந்தப் போரை...

காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் | Photos

இன்று சென்னை திருவான்மியூரில் அரசு நடுநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை...

"இடைத்தேர்தலைத் திணிப்பவர்களே தேர்தல் செலவையும் ஏற்க வேண்டும்" – தாராபுரத்தில் சீமான் ஆவேசம்

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6...