20
November, 2026

A News 365Times Venture

20
Friday
November, 2026

A News 365Times Venture

"வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மௌனம் காத்தது மனித உரிமை மீறல்" – டாக்டர் கிருஷ்ணசாமி கூறுவது என்ன?

Date:

“ஒரு மக்கள் பிரதிநிதியின் உடல்நிலை குறித்து மூன்று மாதங்கள் மருத்துவமனையும், அரசும் மௌனம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை” என்று கொளத்தூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவுக்கான இரங்கல் செய்தியில் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

வி.எஸ்.பாபு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதியன்று மூச்சுத்திணறலோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்கள் உயிர்நீத்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.

ஏறக்குறைய இரண்டரை மாதங்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், அவருக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள முடியாமல் போய்விட்டது. அவர் அனுமதிக்கப்பட்டுச் சில தினங்களிலேயே ஆபத்தான நிலையில் இருப்பதாகச் செய்திகள் வந்தன. எனினும், முழு விவரம் எதுவும் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலிருந்தும் வெளிவரவில்லை, அரசின் சார்பாகவும் வெளியிடப்படவில்லை.

அந்தச் சூழ்நிலையில்தான் வி.எஸ்.பாபு அவர்களுடைய உடல்நிலை குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி, நாம் கடந்த 07.10.2026 ஆம் தேதியன்று அறிக்கை கொடுத்திருந்தோம்.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

அதற்குப் பின்னரும் அரசின் தரப்பிலும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் கொடுக்கப்படவில்லை. இப்பொழுது அவருடைய மரணச் செய்தி மட்டும் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஐந்தாண்டுகளுக்கு கொளத்தூர் தொகுதி மக்களுக்காகப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், சில மாதங்கள் கூடப் பணியாற்ற முடியாமல் மரணமெய்திவிட்டார்.

அவர் மக்களுடைய பிரதிநிதி. அவருடைய உடல்நிலை குறித்து இந்த மூன்று மாதங்கள் மருத்துவமனையோ அல்லது அரசோ மௌனம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதையே ஒரு மனித உரிமை மீறலாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

அவருடைய மரணத்தால் வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், அவருடைய இயக்கத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“நாங்க சலுகைகள் தருகிறோம்; வேலைவாய்ப்பு, ஊதியத்தை உயர்த்த நிறுவனங்கள் என்ன செய்தன?" – பிரதமர் மோடி

டெல்லியில் நவம்பர் 19-ம் தேதி நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை...

வி.எஸ் பாபுவுக்கு தீவிர சிகிச்சை; மருத்துவமனை வந்த ஆதவ் அர்ஜுனா – போலீஸ் குவிப்பு!

கடந்த செப்.9 ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக தவெக கொளத்தூர் எம்எல்ஏ...

இணையம் வழியே புகார் அளித்தால் உடனடியாக மின்னணு ரசீது வழங்கும் திட்டம் – எப்படி செயல்படும்?

‘ஆன்லைன்’ வாயிலாக, காவல் துறையில் அளிக்கப்படும் புகார்களுக்கு, உடனடியாக, இ –...