21
November, 2026

A News 365Times Venture

21
Saturday
November, 2026

A News 365Times Venture

"விரைவான பதில்களை விட, வேகமான செயல்பாடு தான் சிறந்தது"- ஆந்திரா அமைச்சர் கிண்டலுக்கு கீர்த்தனா பதில்

Date:

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல முதலீடுகள் ஆந்திரா பக்கம் மடைமாறுவது சமீபத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஆந்திரா அமைச்சர் கிண்டல்

இந்த நிலையில், நேற்று (நவம்பர் 20) ஆந்திரா அமைச்சர் லோகேஷ் நாரா தனது எக்ஸ் பக்கத்தில், “பிரேக்கிங்: ஆந்திரப் பிரதேசத்தின் அதிர்ச்சியூட்டும் ரகசிய முதலீட்டு வியூகம் லீக் ஆகிவிட்டது!

அதன் பெயர் தான் ‘முதலீட்டாளர்களுக்கு அன்றே பதில் அளிப்பது’. தாராளமாக இதை நீங்களும் காப்பி அடித்துக்கொள்ளலாம்” என்று கேலி செய்வதுபோல பதிவிட்டிருந்தார்.

கீர்த்தனா பதில்

கீர்த்தனா பதில்

லோகேஷ் நாராவிற்குப் பதிலளிப்பதுபோல, தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில், “விரைவான பதில்கள் நல்லதுதான்; ஆனால், அதைவிட வேகமான செயல்பாடு? அதைவிடச் சிறந்தது!

தமிழ்நாடு, ‘வெற்றி’ முதலீடு மற்றும் செயல்பாட்டு மாநாடு 2026-ன் இரண்டாவது பதிப்பிற்குத் தயாராகி வருகிறது!

நமது இலக்கு மிகத் தெளிவானது: முதலீட்டு ஒப்பந்தங்கள், அவற்றைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரும் மைல்கற்கள், களத்தில் இறங்கும் திட்டங்கள் மற்றும் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள்.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையின் கீழ், முதலீட்டு ஒப்பந்தங்களை நிஜமான வளர்ச்சியாக மாற்றுவதிலும், களத்தில் உறுதியான பலன்களை வழங்குவதிலும் நாங்கள் முழு கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம்.

இன்னும் 4 நாட்களே உள்ளன!

25 நவம்பர் 2026” என்று பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கணவன் மனைவியின் செல்போனையும் மனைவி கணவனின் செல்போனையும் சோதிக்கலாமா? | சட்டம் சொல்வது என்ன? – 18

உங்கள் கணவரோ அல்லது மனைவியோ, “நம்ம ரெண்டு பேரும் நம்ம செல்போன்களை...

`பெருமாள் முருகனால் போலியான புத்தகங்களை கண்டறியும் போது உங்களால் முடியாதா?' – நீதிபதி கேள்வி

நெல்லையைச் சேர்ந்த ராமசுப்பு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஒரு...

ரூஸ்வெல்ட் – சர்ச்சில் – ஜோசப் ஸ்டாலின் இடத்தில் ட்ரம்ப் – ஷி – புதின்? புதிய 'யால்டா'வா இது?

உலக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,...

"காங்கிரஸ் இந்தியாவை ஏன் ஏழை நாடாகவே வைத்திருந்தது?" – காங்கிரஸிடம் கிரண் ரிஜிஜூ 4 கேள்விகள்

சீனாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர்...