8
July, 2026

A News 365Times Venture

8
Wednesday
July, 2026

A News 365Times Venture

`வார்த்தை விளையாட்டு வேண்டாம்..!' – திருமாவளவன் பேச்சு குறித்து மாணிக்கம் தாகூர்

Date:

“அமைச்சரவையில் இடம்பெற்றதாலேயே தவெக கூட்டணியில் இணைந்துவிட்டதாகச் சொல்ல முடியாது” எனக் கூறிய திருமாவளவனுக்கு, மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரிடம் திருமாவளவன் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தவெக அரசு ஆட்சி அமைய ஆதரவு கொடுத்தது ஆதரவு நிலை. அமைச்சரவையில் இடம்பெற்றது தோழமை நிலை. அடுத்த நிலை கூட்டணி அமைக்கும் நிலை, பெயர் சூட்டுவதற்கான நிலை.

திருமாவளவன்

இதில் கம்யூனிஸ்ட்கள் மட்டுமே ஆதரவு நிலையோடு நிற்கிறார்கள். அதை நாங்கள் மதிக்கிறோம். தவெக தலைமையில் ஒரு நல்ல கூட்டணி அரசு அமைந்துள்ளது. ஆட்சியில் பங்கு கொடுத்து, முதல்வர் விஜய் தோழமையை உருவாக்கியுள்ளார். பரஸ்பர நம்பிக்கையோடும், சகோதரத்துவத்தோடும் தவெக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

மூன்று கட்சிகளிலும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கூட்டணியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது குறித்து, அடுத்த கூட்டத்தில் முடிவெடுப்போம். அமைச்சரவையில் இடம்பெற்றாலே அதில் நீங்களும் ஓர் அங்கம்தான். வார்த்தை விளையாட்டு வேண்டாம்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

திருமாவளவன் கொண்ட கொள்கையில் தெளிவாக இருப்பவர். பாஜக, ஆர்.எஸ்.எஸ்-ஸின் வகுப்புவாத, மதவாத கொள்கையை எதிர்த்து எந்த சஞ்சலமும் இல்லாமல் போராடுபவர். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அவரின் நிலை என்பது அவர் கட்சியின் நிலை. அது குறித்து நாங்கள் பதில் சொல்ல முடியாது” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`திமுக, அதிமுக-வுக்கு விரைவில் ஆளே இல்லாத நிலை ஏற்படும்' – அமைச்சர் நிர்மல்குமார் ஆருடம்

கோவை மருதமலை பகுதியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு...

Deemed University: “இது அலட்சியமா அல்லது வேண்டுமென்றே செய்த நிர்வாகப் பிழையா?" – அண்ணாமலை கேள்வி

Aதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்த மூன்று மருத்துவக்...

"எஃப்.ஐ.ஆர்-லேயே கை வச்சுட்டாங்க!" – செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்! – பின்னணி என்ன?

தமிழ்நாடு சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க...