10
October, 2026

A News 365Times Venture

10
Saturday
October, 2026

A News 365Times Venture

'வறட்சி, நிதி பற்றாக்குறை' – மாணவர்களுக்கு சம்பளப் பணத்தில் மதிய உணவளிக்கும் மகாராஷ்டிரா ஆசிரியர்கள்

Date:

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு 75 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளை மாநில அரசு வறட்சி பகுதியாக அறிவித்து இருக்கிறது.

வறட்சி பாதித்த பகுதிகளை மத்தியக் குழு ஆய்வு செய்து வருகிறது. கிராமங்களில் மாணவர்கள் மதிய உணவையே பிரதானமாக நம்பி இருக்கின்றனர். ஆனால் அதற்கு தேவையான நிதியை அரசு கொடுக்காமல் தாமதம் செய்து வருகிறது.

கடந்த நான்கு மாதங்களாக, கல்வியாண்டு துவங்கியதில் இருந்து, மகாராஷ்டிரா முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள், மதிய உணவு திட்டத்தைத் தொடர்ந்து நடத்த, தங்கள் பாக்கெட்டில் இருந்து பணம் செலுத்தி வருகின்றனர்.

உணவுக்கு நிதியுதவி வழங்கும் பிரதமர் போஷன் நிதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் ஒருவர் இது குறித்து கூறுகையில், ”உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் ஜூன் 15 முதல் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சமையல் எரிபொருள் மற்றும் காய்கறிகளுக்கு பணம் செலுத்துகிறார்கள். வறட்சியால் உணவு விருப்பங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயம் வீடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

எங்கள் குழந்தைகளில் பெரும்பாலானோர் வீட்டில் சோள ரொட்டியுடன் பருப்பு மற்றும் வெங்காயத்தை மட்டுமே சாப்பிடுகிறார்கள். எனவே இந்த ஒரு பள்ளி உணவே அவர்கள் இப்போது பெறும் நல்ல ஊட்டச்சத்துக்கான ஒரே ஆதாரம். உணவுப் பொருட்களுக்கு நான் பணம் செலுத்தவில்லை என்றால், குழந்தைகள் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிடுவார்கள். ஆனால் இது எங்கள் சமையல்காரர்களுக்கு மோசமாக உள்ளது. நிதி தாமதம் காரணமாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

இது குறித்து அஹல்யாநகரைச் சேர்ந்த ஜில்லா பரிஷத் பள்ளி ஆசிரியர் பவுசாஹேப் சாஸ்கர் கூறுகையில், ”மதிய உணவு என்பது நாட்டின் மிக முக்கியமான நலத்திட்டங்களில் ஒன்றாகும். இது பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரித்துள்ளதாக சான்றுகள் காட்டுகின்றன. ஆனால் இந்தத் திட்டத்தை அரசாங்கம் கையாள்வது மிகக் குறைவாகவே உள்ளது.

பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இது குறித்து புகார் செய்வதில்லை, ஏனெனில் அதிகாரிகள் நீதிமன்ற நடவடிக்கையைக் கூறி மிரட்டுகிறார்கள். திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தவேண்டிய பொறுப்பு பெரும்பாலும் எங்கள் மீது தள்ளப்படுகிறது,” என்றார்.

இது குறித்து வார்தா தலைமை ஆசிரியர் விஜய் கோம்பே கூறுகையில், ”1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவ, மாணவியருக்குத் தலா 2.59 ரூபாயும், 6 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குத் தலா, 3.71 ரூபாயும் காய்கறி, எரிபொருளுக்குப் போதுமா? 125 மாணவர்களுக்கு, மாதம், 3,000 ரூபாய் கொடுத்து, எரிபொருள் வாங்குகிறேன்,” என்றார்.

மற்றொரு பள்ளி ஆசிரியர் இது குறித்து கூறுகையில், “அரசு கொடுக்கும் சொற்ப நிதியில் இருந்து ஆசிரியர்கள் கூடுதலாக ஆப்பிள், வாழைப்பழம் வாங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நகைப்பிற்குறியது. ஒருமுறை உலர் பழங்களை யாரோ ஒருவர் பரிந்துரைத்தார். உலர் பழங்களை 2 ரூபாய்க்கு விற்பவர் யார்? ஒரு பள்ளிக்கு மாதம் ஒரு எல்பிஜி சிலிண்டர் கிடைக்கிறது.

அது தீர்ந்துவிட்டால், தலைமை ஆசிரியர்தான் விறகுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது” என்றார்.

இந்திய மதிய உணவுத் தொழிலாளர் சம்மேளனத்தின் தேசிய செயலாளர் அசோக் தோரட் இது குறித்து கூறுகையில், ”இந்த பிரச்னைகள் குறித்து கவனத்தை ஈர்க்க பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் 1.58 லட்சம் மதிய உணவு பணியாளர்கள் உள்ளனர். அதில் 70% பெண்கள். தாமதத்திற்குப் புதிய மென்பொருளை அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் அதிகாரிகள் மட்டும் சரியான நேரத்தில் பணம் பெறுவது எப்படி? சம்பளம் தாமதமானாலும் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்கிறார்கள். இந்த வேலையை இழக்க நேரிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். நாட்டின் மிக முக்கியமான நலத்திட்டங்களில் ஒன்றான மதிய உணவுத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் நான்கு மாதங்கள் ஊதியம் இல்லாமல் வேலை செய்வதை கற்பனை செய்து பாருங்கள்” என்றார்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Delhi Protest: அபிஜித் தீப்கேவின் பாட்டி காலமாகிவிட்டாரா? டெல்லி காவல்துறை சொல்வது என்ன?

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி...

டெல்லி: "எங்க கூட்டிட்டு போறாங்கன்னு தெரியல" – போலீஸ் ஜீப்பில் இருந்தபடி வீடியோ வெளியிட்ட CPM MP

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர்...

அதிமுக: இடைத்தேர்தல் தோல்வி; உச்சத்தில் உட்கட்சி பூசல்–எஸ்.பி. வேலுமணியின் அடுத்த மூவ் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்றது....

"விமானியாக வேண்டும்" கனவுக்குப் பின்னால் 9/11? – Flydubai துணை விமானி குறித்து அதிர்ச்சி தகவல்!

விமானியாக வேண்டும் என்பது பலரின் கனவு. ஆனால், அந்த விமானத்தையே தாக்குதலுக்குப்...