26
November, 2026

A News 365Times Venture

26
Thursday
November, 2026

A News 365Times Venture

'வதந்தி, அய்யோ பாவம், புகார் வந்தால்…' – கள்ளக்குறிச்சி MLAவுக்கு ஆதரவாக ஒலித்த தவெக குரல்கள்!

Date:

நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகு கலெக்டருக்குத் தொந்தரவு செய்யும் விதத்தில் மெசேஜ் அனுப்பிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏவைத் தற்காக்கும் விதத்தில், ‘வதந்தி… அய்யோ பாவம்… Ignore Negativity’ எனத் தவெகவும் அதன் கூட்டணிக் கட்சியினரும் பேசியவை.

அருள் விக்னேஷ்

கலெக்டர் விவகாரம் பேசுபொருளான சமயத்தில் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். அப்போதுதான் லாஜிக்கே இல்லாமல் ‘எனக்கு பிளட் டெஸ்ட் வேண்டுமானால் எடுத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என லடாய் கொடுத்தார்.

அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியவை, ”அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை. எங்க சி.எம் சார் ஸ்டைலில் Ignore Negativity என்பதுதான் எங்களின் பணி. கம்பியூட்டர் முன் உட்காந்து கொண்டு கட்சிக்கும் எனக்கும் கெட்டப் பெயர் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய ஊழலை வெளிக்கொண்டு வர முயல்வதால் என் மீது அவதூறு பரப்புகிறார்கள். வேண்டுமென்றால் எனக்கு ப்ளட் டெஸ்ட் எடுத்துப் பாருங்கள்!” எனக் கூறியிருந்தார்.

அருள் விக்னேஷ் குற்றச்சாட்டுகளை மறுக்க, அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரும் இந்த விஷயமே வதந்தி எனப் பேசினார். 10 நாட்களுக்கு முன்பாக தலைமைச் செயலகத்திலும் மதுரையிலும் அவர் பேசியவை, ”சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலை வைத்து இப்படி பேசுவதா? இந்த விஷயத்தைப் பெரிதாக்கிய கனிமொழி பற்றி சமூக வலைத்தளங்களில் இப்படியொரு விஷயம் வருகிறதென கூறினால் ஏற்றுக்கொள்வாரா? கனிமொழி சொன்னத்தைப் போல எதுவும் நடக்கவில்லை. அவர்தான் இதை அரசியலாக்குகிறார். வதந்திக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லிக்கொண்டே இருக்க முடியாது.

CTR
CTR

சமூக வலைத்தளத்தில் பேசுவதையெல்லாம் எடுத்து வருவது மரியாதையாக இருக்குமா? உதயநிதி பால்டாயில் குடித்தார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் வந்தது. அதைப்பற்றியெல்லாம் நாங்கள் பேசட்டுமா? அவரின் அப்பாவைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் நிறைய பேசுகிறார்கள். இதெல்லாம் திமுகவின் திசைத்திருப்பல் யுக்தி” என ஐ.டி.விங்கில் முகம் தெரியாத விஜய் ரசிகர்கள் ஜல்லி அடிப்பதைப் போல பேசி வைத்திருந்தார்.

இதற்கெல்லாம் உச்சம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்தான். பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாகப் பேசாமல், குற்றஞ்சாட்டப்பட்டவருக்குப் பரிந்து பேசியிருந்தார். “கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பேட்டியைப் பார்த்தேன். நாம் எந்த அளவுக்கு வாட்ஸ்அப் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. வாட்ஸ்அப்பில் யாராவது ஒரு வதந்தியைப் பரப்பிவிட்டால், உடனே அதற்கு எதிர்வினையாற்றி, சம்பந்தப்பட்டவரை குற்றவாளியாக்கி ஊடக விசாரணையைத் தொடங்கிவிடுகிறார்கள்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

அந்தச் சட்டமன்ற உறுப்பினர் பாவம். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த முதல் தலைமுறை எம்.எல்.ஏ. எளிய பின்னணியைக் கொண்டவர். பெரிய அரசியல் அனுபவம் இல்லாத எளிய குடும்பத்து மனிதர்களுக்கு த.வெ.க வாய்ப்பளித்து வெற்றி பெறச் செய்திருக்கிறது. இத்தகைய சூழலில், உண்மைத்தன்மை அறியாமல் வாட்ஸ்அப் தகவல்களை வைத்து மட்டுமே ஒருவருக்கு எதிராக ஊடக விசாரணை நடத்துவது எந்த விதத்தில் நியாயமாகும்?

அதற்கு அவரும் தெளிவாக மறுப்பு தெரிவித்திருக்கிறார். ‘சி.சி.டி.வி (CCTV) காட்சிகளைப் பாருங்கள், தொலைபேசி அழைப்புகளைச் சோதியுங்கள், நான் அப்படி எதுவுமே செய்யவில்லை’ என்று அவர் அழுத்தம் திருத்தமாக விளக்கம் அளித்த பிறகும், மீண்டும் மீண்டும் அதைப் பற்றியே கேள்வி எழுப்புவதும் விவாதிப்பதும் சரியல்ல.

ஒருவேளை அதில் ஏதேனும் தவறு நடந்திருந்தால், அதை விசாரித்து நடவடிக்கை எடுப்பது வேறு விஷயம். ஆனால், ஒரு தவறே நடக்காதபோது, வெறும் வாட்ஸ்அப் வதந்தியை உண்மை என நம்பி, எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை அதற்கு எதிர்வினையாற்றும் அளவுக்கு நிலைமை தீவிரமடைந்தது அதிர்ச்சியளிக்கிறது” எனக் கூறி நிர்மல் குமாருக்கே கடும்போட்டி அளித்திருந்தார்.

இப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ-வைக் கைது செய்ய வேண்டும் எனப் பதறிப்போய் பேசியிருக்கிறார். பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்க வேண்டும் என்கிற அடிப்படை அறம் இருந்திருந்தாலே இந்தப் பல்டியையெல்லாம் அடித்திருக்க வேண்டாம்.

இவர்கள் மட்டுமல்ல அமைச்சர்கள் ராஜ் மோகன், அருண் ராஜ் போன்றோருமே ‘கலெக்டர் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்’, ‘முதல்வரின் பரிசீலனையில் இந்த விவகாரம் உள்ளது’ என்றே மழுப்பிக் கொண்டிருந்தனர். ஆனால், நீதிமன்றத்தில் நடந்திருக்கும் வாதங்களின்படி கலெக்டர் ஜூலை 31 ஆம் தேதியே துறைரீதியாக உயரதிகாரிகளிடம் புகாரளித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. அந்தப் புகார் குறித்து அமைச்சர்களுக்கு எதுவுமே தெரியாதா அல்லது தெரிந்தே எம்.எல்.ஏ-வைக் காப்பாற்ற முயன்றார்களா எனும் கேள்வியும் எழுகிறது.

‘பெண்கள் பாதுகாப்புதான் முக்கியம்’ எனப் பேசி ஆட்சியில் அமர்ந்த விஜய்யின் சகாக்கள் இந்த விவகாரத்தை மூடி மறைக்க எடுத்த பிரயத்தனங்கள் இந்த அரசின் மீது பெரும் கரும்புள்ளியாக மாறியிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

”கட்சிப் பதவி வாங்கித் தரேன்”- தவெகவைச் சேர்ந்த பெண்ணுக்கு அக்கட்சி நிர்வாகி ஆபாசமெசேஜ் அனுப்பினாரா?

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் தவெக-வின் நகரச் செயலாளர் பாரதிராஜா. இவர்...

திருப்பரங்குன்றம் விவகாரம்: "அறங்காவலர் குழு எங்களிடம் ஆலோசிக்கவில்லை" – ஸ்தானிகர்கள் போர்க்கொடி

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் பாரம்பர்ய வழக்கபடி உச்சிப்பிள்ளையார் கோவிலில்தான் விளக்கேற்றபடும். அதுதான்...

திருப்பரங்குன்றம்: `இதனால் தான் தூணில் தீபம் ஏற்றவில்லை; வருத்தம்.!" – ஆட்சியரின் 17 பக்க அறிக்கை

தீபத் தூணில் தீபம் ஏற்றத் தேவஸ்தானம் குழு அமைத்துப் பெயர்களைப் பரிந்துரைக்காததால்,...

"ஈரான் ரசாயன ஆயுதங்களைத் தயாரிக்கிறது" – இஸ்ரேலின் குற்றச்சாட்டுக்கு ஈரானின் 'ஷார்ப்' பதில் என்ன?

ஈரான் ரசாயன ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர்...