20
November, 2026

A News 365Times Venture

20
Friday
November, 2026

A News 365Times Venture

'யோசனை ஓகே, ஆனால் நடைமுறைப்படுத்துவது கடினம்' – அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்து ட்ரம்ப் ஓப்பன் டாக்

Date:

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு பரஸ்பர உடன்பாட்டை எட்டுவது கடினமான இலக்கு என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார். இருப்பினும், அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வேன் என்றும் அவர் கூறினார்.

சீனாவில் நடந்த முத்தரப்பு உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு வாஷிங்டனுக்கு விமானத்தில் திரும்பியபோது, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்த ட்ரம்ப், “அணு ஆயுதக் கட்டுப்பாட்டு யோசனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால், ஒரு பேச்சுவார்த்தையின் அடிப்படையில், ஒரு ஜனாதிபதியாக அதைச் செய்வது எனக்கு மிகவும் கடினமான விஷயம்,” என்று குறிப்பிட்டார்.

இந்த பயணத்தில் ட்ரம்பின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக, அணு ஆயுதங்கள் குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது இருந்தது.

ட்ரம்ப்

குறிப்பாக, ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு இணையாக தனது அணு ஆயுத வலிமையை பெருமளவில் அதிகரித்து வரும் சீனா, இந்த விவகாரம் குறித்துப் பேசத் தயக்கம் காட்டி வருகிறது. இதுகுறித்து பேசிய ட்ரம்ப், “அதிபர் ஷி, அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் யோசனையில் என்னுடன் உடன்படுகிறார். ஆனால் அதே நேரத்தில், ‘எங்களிடம் 4,000 அணு ஆயுதங்கள் உள்ளன, நாங்கள் பாதியைக் கைவிடுகிறோம்’ என்று ஒருவர் சொல்வது மிகவும் கடினம். அதைச் செய்வது கடினம்,” என்று விளக்கினார்.

இந்த இலக்கை அடைவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் உளவியல் ரீதியான தடைகள் இருந்தபோதிலும், இந்த விஷயத்தை தொடர்ந்து எழுப்புவேன் என்று ட்ரம்ப் உறுதியளித்தார். “அது செய்யப்பட வேண்டும், ஆனால் உளவியல் ரீதியாகச் செய்வது கடினம்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

காவிரி விவகாரம்: தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி; பெரும் பின்னடைவு! உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த மூன்று...

“ரூ700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: எப்போதுதான் முதல்வர் பேசுவார்?" – ஸ்டாலின் விமர்சனம்

சென்னை மாதவரத்தில் மத்திய வருவாய் புலனாய்வு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்....

மதுரையில் ரூ.2.32 கோடி அளவிற்கு கல்குவாரி முறைகேடு: முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சோதனை

மதுரை பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் கிரஷர் மற்றும் செம்மண் மற்றும்...