28
September, 2026

A News 365Times Venture

28
Monday
September, 2026

A News 365Times Venture

"மோடி ஜி பயப்படுகிறார்; எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும்.!"- ராகுல் காந்தி விமர்சனம்

Date:

மக்களவையில் ராகுல் காந்தி நேற்று (பிப்.2) முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதி வெளி வராத `Four Stars Of Destiny’ புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து பிரபல பத்திரிகை வெளியிட்ட செய்திக்கட்டுரையின் அடிப்படையில் பேச முற்பட்டார்.

அதற்கு பாஜக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தொடர்ந்து ராகுல் காந்தி பேச முற்பட்டபோது, அவரது மைக் அணைக்கப்பட்டது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் பேச விடாமல் கடுமையாக எதிர்த்திருந்தனர்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி

எம்.பி-கள் சஸ்பென்ட்

இந்நிலையில் இன்று (பிப்.3) நாடளுமன்றத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என்று குற்றச்சாட்டி மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து சு.வெங்கடேசன், மாணிக்கம் தாக்கூர், அம்ரிந்தர் சிங், டீன் குரிய கோஸ் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

எம்.பி-கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயப்படுகிறார் மோடி!

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ராகுல் காந்தி, ” நரவானே, எப்ஸ்டீன் கோப்பு, அமெரிக்க-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நாங்கள் பேசினாலே மோடி பயப்படுகிறார்.

கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடந்த (அமெரிக்க-இந்தியா) வர்த்தக ஒப்பந்தத்தில் நரேந்திர மோடி நேற்று இரவு கையெழுத்திட்டார்.

அவர் மீது கடுமையான அழுத்தம் உள்ளது. அதனால் நமது பிரதமர் சமரசத்திற்கு உள்ளாகியிருக்கிறார். அவர் நம் நாட்டை விற்றுவிட்டார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நரேந்திர மோடி ஜி பயப்படுகிறார், ஏனென்றால் அவருடைய பிம்பத்தை உருவாக்கியவர்களே இப்போது அந்த பிம்பத்தை உடைக்கிறார்கள்.

அதானி ஜி மீது அமெரிக்காவில் ஒரு வழக்கு உள்ளது, அது உண்மையில் மோடி ஜி மீதான வழக்குதான்.

எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும் வெளியிடாத பல விஷயங்கள் உள்ளன. அதன் காரணமாகவும் அழுத்தம் உள்ளது. இதனை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

Loading…

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related