11
July, 2026

A News 365Times Venture

11
Saturday
July, 2026

A News 365Times Venture

மேலூர் இளைஞர் மரணம்: நிபுணர் குழு மூலம் உடற்கூறாய்வு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

Date:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த கவிதா, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “எனது மகன் சீமைராஜா. கடந்த ஜூலை 4-ல் மேலூர் காவல் ஆய்வாளர், என் மகன் சீமைராஜாவைத் தேடி என் வீட்டுக்கு வந்தார். எதற்காகத் தேடுகிறீர்கள் எனக் கேட்ட போது மேலூர் பகுதியில் திருட்டில் ஈடுபட்டதற்காக மகனைத் தேடுவதாகக் கூறினார்.

ஜூலை 6-ம் தேதி காலை 9 மணி அளவில் மேலூர் காவல் ஆய்வாளர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சாலை விபத்தில் சீமைராஜா இறந்து விட்டதாகவும், அவர் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறினார்.

நாங்கள் சென்று பார்த்தபோது உடலில் எந்தக் காயங்களும் இல்லை. சீமைராஜவுடன் சென்ற மற்றொரு நபரான சூர்யாவைச் சந்திக்க போலீஸார் அனுமதிக்க மறுக்கிறார்கள். என் மகன் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனது மகனின் உடலை மூத்த தடயவியல் நிபுணர் குழுவை வைத்து உடற்கூறாய்வு செய்யவும், உடற்கூறாய்வு முழுவதையும் வீடியோ பதிவு செய்யவும், மேலூர் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

சீமைராஜா

இம்மனுவை நீதிபதி எஸ்.விக்டோரியா கௌரி விசாரித்தார். அரசு தரப்பில், ‘சாலை விபத்தில் உயிரிழந்தவருடன் சென்ற நபர், காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் அவரது வழக்கறிஞருடன் சென்று, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரைப் பார்த்து பேசவும், பின்னர் தேவை எனில் இவ்வழக்கைத தொடர்ந்து நடத்தலாம்’ எனக் கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

PF: ரூ.5 லட்சத்திற்கு Auto settlement, 75% பணம் எடுக்கலாம், கூடுதல் வட்டி – EPFO புது அப்டேட் லிஸ்ட்

சமீபத்தில் வருங்கால வைப்பு நிதி வலைதளம் மற்றும் அதன் ஆப்பான UMANG...

'It's over' – ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் – மீண்டும் போர் தொடக்கமா?

கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய அதிரடித் தாக்குதலில்,...

ITR Filing சீசன் இது; இன்னும் ஆதார் – பான் எண்ணை இணைக்கவில்லையா? என்ன, எப்படி செய்யலாம்? | How to

ஆதார் கார்டும், பான் கார்டும் இணைக்க வேண்டும். அப்படியில்லை என்றால், பான்...

பூம்புகார்: வெயில் மழையில் தவிக்கும் சுற்றுலா பயணிகள்: எப்போதுதான் அமைக்கப்படும் பேருந்து நிறுத்தம்?

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமானதாகவும் காப்பியங்கள் போற்றும் முதன்மையான சுற்றுலாத்...