23
October, 2026

A News 365Times Venture

23
Friday
October, 2026

A News 365Times Venture

'மெக்கா மசூதியில் ஒழுக்கக்கேடு செயல்' – வங்கதேச தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவூதி

Date:

சவூதி அரேபியாவில் வங்கதேசத்தைச் சேர்ந்த தம்பதியினருக்குக் கடந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இது குறித்து சவூதி அரேபியாவின் அரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், “மெக்காவில் உள்ள புனிதப் பள்ளிவாசலுக்குள் வங்கதேசத்தைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சிதி அக்தர் பாலின ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டனர்.

உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பிறகு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தம்பதி

இதையடுத்து 2026-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி மெக்காவில் இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், அது எந்தவிதமான செயல் என்று சவூதி அரசு தெரிவிக்கவில்லை.

மரணத் தண்டனை குறித்து வங்கதேசத்திடம் முன்னரே தெரிவித்துவிட்டதாக சவூதி அரேபியா கூறுகிறது.

ஆனால், வங்கதேச அரசு தங்களிடம் இது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை என்று கூறுகிறது. மேலும், சவூதி அரேபியாவிடம் இந்த வழக்கு குறித்த தரவுகளைக் கேட்டுள்ளது.

குறிப்பிட்ட தேசத்திடம் தெரிவிக்காமல், அந்த நாட்டின் குடிமக்களுக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"2, 3 நாள்களில் ரஷ்யாவிலிருந்து டீசல் ஏற்றுமதி; அமெரிக்காவுக்கு உரமும் அனுப்பத் தயார்" – புதின்

நேற்று அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ரஷ்யாவில் அந்த நாட்டு...

“ஆதவ் அர்ஜுனா நிழல் முதலமைச்சர் போல் செயல்படுகிறார்..!" – கே.பி.முனுசாமி விமர்சனம்

"தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் ராகுல் காந்தியை யாரும் விமர்சிப்பது...

நாதக கார்த்திகா கைது: "நீங்கள் வேலை செய்கின்ற இடத்தால் விளைந்த நோய்" – வன்னிஅரசுக்கு அ. ராசா பதில்

தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல்...