1
September, 2026

A News 365Times Venture

1
Tuesday
September, 2026

A News 365Times Venture

"முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது; ஆனால்…" – வைகோ என்ன சொல்கிறார்?

Date:

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், `முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர்’ எனத் தவெகவினர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், “ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று தவெகவிற்கு அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று (ஆக.30) எச்சரிக்கை விடுத்திருந்தார்.

முதல்வர் விஜய்

இந்நிலையில் விஜய்தான் அடுத்த பிரதமர் என்று எழுந்திருக்கும் முழக்கம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோவிடம் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த வைகோ, “பிரதமராக வேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ முதல்வர் விஜய்க்குத் துளியளவும் கிடையாது.

முதல்வரின் கற்பனையில் கூட அப்படி ஒரு எண்ணம் இல்லை என்பதால் அமைச்சர்கள் நினைத்தபடி பேசக்கூடாது.

இந்தியாக் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிப்பதால் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்.

வைகோ
வைகோ

வேறு யாரையும் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியாது. இதுபோன்று பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர்கள், தவெகவினருக்கு முதல்வர் அறிவுறுத்த வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“50 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி: 106-வது இடத்தில் இந்திய ஜனநாயகம்" – எம்.பி. மாணிக்கம் தாக்கூர்

இந்தியாவின் ஜனநாயகம் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர்...

ஜல்லிக்கட்டு குறித்து சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சு; மாடுபிடி வீரர்கள் எதிர்ப்பு; எம்எல்ஏ விளக்கம்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக)...

“100 நாள்களில் ரூ.28,000 கோடி கடன்; விஜய்யின் தவெக அரசு நிலைக்காது!" – விளாசிய எடப்பாடி பழனிசாமி

வேலூரில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்...

DMK: "மனக்கசப்புடன் இனியும் திமுகவில் தொடர முடியாது" – தோப்பு வெங்கடாசலம் சொல்வது என்ன?

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், தி.மு.க- வின் முன்னாள் ஈரோடு மத்திய மாவட்ட...