29
October, 2026

A News 365Times Venture

29
Thursday
October, 2026

A News 365Times Venture

`மின்வெட்டால் மீனாட்சி அம்மனிடம் நிம்மதியாக பிரார்த்தனைகூட செய்ய முடியாது'- எடப்பாடி பழனிசாமி வேதனை

Date:

முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு மதுரைக்கு வந்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாலை 5:30 மணிக்கு மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் சென்றார். அவர் சென்ற சில நிமிடங்களிலேயே கோயிலில் மின் வெட்டு ஏற்பட்டது. இதையடுத்து உடனே கோயில் நிர்வாகிகள் ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் கொடுத்தனர்.

தொடர்ந்து தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதையெல்லாம் மீனாட்சி அம்மன் பார்த்தால் சரி. இந்த ஆட்சியில் நிம்மதியாய் வாழ முடியாது, நிச்சயமாய் பக்தர்கள் வாழ முடியாது. மக்கள் நிம்மதியாக இறைவனை பிரார்த்தனைக்கூட செய்ய முடியாது” எனக் கூறிவிட்டு கிளம்பிச் சென்றார்.

மீனாட்சி அம்மன் கோயில்

அவர் சென்றதைத் தொடர்ந்து மின்சாரத்திற்காக கொடுக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரை ஆஃப் செய்துவிட்டு, மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்யும்போது மின் தடை ஏற்பட்டது, சலசலப்பை ஏற்படுத்தியது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`ரூ.5,000 கோடி நிதி மோசடி செய்த பிரேம் குமாருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு?' – உதயநிதி கேள்வி!

ரூ.5,000 கோடி நிதி மோசடி செய்த பிரேம் குமாருக்கும் முதல்வருக்கும் என்ன...

“பசும்பொன்னில் சசிகலாவைச் சந்திக்க திட்டமா?" – எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச்...

`முதல்வர் அப்படி உத்தரவிட்டிருக்க மாட்டார்..!' – பேராசிரியர் கலையரசன் கைது குறித்து திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பேராசிரியர்...

ICU நோயாளிகளுக்கு மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை; கோத்தகிரி அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது. கோத்தகிரி மற்றும்...