28
May, 2026

A News 365Times Venture

28
Thursday
May, 2026

A News 365Times Venture

’மாணிக்கம் தாகூரை ராஜினாமா செய்யச் சொல்ல திமுக-விற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?’– காங்கிரஸ் பதிலடி

Date:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “த.வெ.க கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் , முஸ்லீம் லீக் பங்கேற்றது முதல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தூக்கத்தை இழந்து தவிக்கிறார். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற கதையாக ஆத்திரத்தின் உச்சத்தில் நின்று கொண்டு உளறிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்றதால், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் சூடு, சொரணை இருந்தால் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார், ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி.

1999 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தி.மு.க போட்டியிட்டது. அடுத்த ஆண்டே வாஜ்பாய் தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தது இதே தி.மு.க.தான். த.மா.கா, இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் வாக்குகளைப் பெற்றுவிட்டு, பா.ஜ.க-வுக்கு எதிரான மக்கள் தீர்ப்பை  எறிந்து விட்டு பாஜகவை ஆதரித்தீர்களே? அப்போது சூடு, சொரணையை பாஜகவிடம் அடகு வைத்தீர்களா? மாணிக்கம் தாகூரை ராஜினாமா செய்யச்  சொல்ல தி.மு.க-வினருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

கணபதி சிவக்குமார்

தேர்தல் பிரச்சாரத்தில் உங்களைக் கழுவிக் கழுவி ஊற்றிய எடப்பாடியை முதலமைச்சராக்க முயன்றீர்களே, அப்போது எங்கே போனது சூடு, சொரணை? நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே பல தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்குக் காங்கிரஸ் தான் காரணம். சூடு சொரணை இருந்தால், தி.மு.க எம்எல்ஏக்கள் எல்லாம் ராஜினாமா செய்யத் தயாரா? அதே சமயம், கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்காத, தி.மு.க-வை தீய சக்தி என்று வசை பாடிய, உதயநிதியை பால்டாயில் என்று அசிங்கப்படுத்திய, ஸ்டாலினை பொம்மை முதல்வர் என்று விமர்சித்த எடப்பாடியை முதலமைச்சராக்கத் துடித்தீர்களே? அன்று தான் வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாவற்றையும் நீங்கள் தொலைத்தீர்கள்.

தீய சக்தி திமுகவோடு எடப்பாடி பழனிசாமி கைகோர்க்கிறார் என்று தெரிந்து  கொதித்து எழுந்து 4 அ.தி.மு.க-வினர் எம்.எல்.ஏ பதவியை தூக்கி எறிந்தனர். அந்த 4 அ.தி.மு.க-வினரும் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி கூறுவது போல், உண்மையிலேயே சூடு, சொரணை உள்ளவர்கள் தான். அ.தி.மு.க-வினரைப் போல் சூடு, சொரணை இருந்தால், காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவுடன் வென்ற தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் காங்கிரஸ் பேரியக்கத்தை சிறுமைப்படுத்த முயன்றால்,  பதிலடி பலமாக இருக்கும் என்பதை தி.மு.க-வினருக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'ஜூலைக்கு மேலும்' கச்சா எண்ணெய் விலை $90 டாலர்களா? இந்தியாவிற்கு காத்திருக்கும் நிதிச்சுமைகள்!

ஈரான் போர் முடிந்து, ஹார்முஸ் நீர்சந்தி திறக்கப்பட்டால் கூட, சர்வதேச சந்தையில்,...

வேலூர்: குறைகளைச் சொன்ன தூய்மைப் பணியாளர்கள்; குறிப்பெடுத்துக்கொண்ட தவெக எம்எல்ஏ வினோத் கண்ணன்!

உலக பட்டினி தினத்தையொட்டி, வேலூர் சட்டமன்றத் தொகுதி த.வெ.க சார்பாக இன்றைய...

கொளுத்தும் வெயில்; அச்சுறுத்தும் Heat Stroke – பாதுகாப்பாக இருப்பது எப்படி? டாக்டர் டிப்ஸ்!

"இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது, அதோடு...

`Congress, IUML-க்கு வராத விமர்சனம் VCK-வுக்கு மட்டும் வருகிறது எனில்.!' – அமைச்சர் வன்னிஅரசு பேட்டி

தமிழ்நாட்டின் சமூக நீதித்துறை அமைச்சராக வி.சி.க.வைச் சேர்ந்த வன்னிஅரசு மே 22,...